விவசாயத்துறை அமைச்சகம்

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா புதுதில்லியில் ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவின் கண்காட்சியை இன்று பார்வையிட்டார்

Posted On: 15 DEC 2023 2:36PM by PIB Chennai

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இன்று புதுதில்லியில் உள்ள டி.எல்.எஃப் ப்ரோமனேட் மாலில் ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவின் கண்காட்சியைப் பார்வையிட்டார். கூடுதல் செயலாளர் மனிந்தர் கவுர், இணை செயலாளர் சுபா தாக்கூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆசியான் இந்திய தூதரகம்,  விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து இரண்டு நாள் ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழா 2023-ஐ ஏற்பாடு செய்கிறது. சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாக்குவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

விழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் சிறுதானியங்களை மையமாகக் கொண்ட கண்காட்சியை திரு அர்ஜுன் முண்டா பார்வையிட்டார், இதில் சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

கலந்துரையாடலின் போது, பிரதமரின் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் விவசாயிகள் செழிப்பு போன்ற மத்திய அரசால் தொடங்கப்பட்ட பல முக்கியமான திட்டங்களை விவசாய சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆசியான் நாடுகளிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல், கலாச்சார மற்றும் சமையற்கலை பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல் மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக நிலையான சிறுதானிய நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை இந்த கண்காட்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

***

ANU/PKV/BS/RR/KV



(Release ID: 1986690) Visitor Counter : 67


Read this release in: English , Urdu , Hindi