ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பான கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உரையாற்றினார்

Posted On: 15 DEC 2023 1:04PM by PIB Chennai

தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தில்  (டிஏஒய்-என்ஆர்எல்எம்) தொடர்புடையவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சரண்ஜித் சிங் நேற்று (14.12.2023) உரையாற்றினார்.

உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் உள்ளிட்டவற்றில் இலக்குகளை அடைவதில் கூட்டு செயல்பாட்டின் முக்கிய பங்கை திரு சரண்ஜித் சிங் வலியுறுத்தினார். கிராமப்புற குடும்பங்களின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து நிலை குறித்து மேலும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

  ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரக வாழ்வாதாரங்கள் துறை இணைச் செயலாளர் திருமதி ஸ்மிருதி சரண் பேசுகையில், அரசின் அணுகுமுறைகள் மிகச்சிறப்பாக உள்ளன என்று அவர் கூறினார்.  திட்டங்களின் பயன்கள் கடைசி நிலை வரை சென்றடைவதை அதிகரிக்க ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

***

ANU/PKV/PLM/AG/KV


(Release ID: 1986684) Visitor Counter : 125


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu