சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023 -ம் ஆண்டில் ஆண் துணையில்லாமல் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பித்த பெண்களின் எண்ணிக்கை 4000-ஐக் கடந்தது

Posted On: 14 DEC 2023 3:51PM by PIB Chennai

2018-ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் ஆண் துணை இல்லாமல்  பெண்கள் பங்கேற்பதற்கான  (எல்.டபிள்யூ.எம்) பிரிவு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, அன்றிலிருந்து இந்தப் பிரிவின் கீழ் மேலும் பெண்கள் விண்ணப்பித்தலை  ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பிரிவின் கீழ் வெற்றிகரமாக விண்ணப்பித்துள்ளனர்.

இந்தப் புனித ஆன்மீக யாத்திரையைச் செய்ய ஆண் துணையை மெஹ்ரம்  அவர்கள் சார்ந்திருந்திருக்க வேண்டியிருந்தது. 2018-ம் ஆண்டில் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள் ஹஜ் பயணத்திற்கு மெஹ்ரம் இல்லாமல் விண்ணப்பிக்க அனுமதித்ததன் மூலம் மத்திய அரசால் இந்தக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது, இதில் தகுதியான பெண்கள் நான்கு (4) குழுக்களாக எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் புனித யாத்திரை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹஜ் -2023-ல், முதல் முறையாக, எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் ஒற்றை தகுதியுள்ள பெண்களும் ஹஜ் -2023 க்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அனுமதித்தது.இந்த நடவடிக்கையின் விளைவாக 2023 -ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் 4000-க்கும் மேற்பட்ட வெற்றிகரமான பெண் விண்ணப்பதாரர்களுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக பங்கேற்பு ஏற்பட்டது, இது அதிக நம்பிக்கை, தனிப்பட்ட சுதந்திரம், அதிகரித்த சமூக இயக்கம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.

எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் விண்ணப்பங்களை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் யாத்ரீகர்களை மேலும் எளிதாக்குவதற்கும் வசதி செய்வதற்கும் நிர்வாக ரீதியாக பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:-

எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் எந்தவொரு தகுதிவாய்ந்த பெண் யாத்ரீகரின் விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் செயல்முறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மெஹ்ராம் வகை ஹாஜிகள் இல்லாத பெண்கள் மட்டுமே தங்குவதற்கு பிரத்யேக கட்டிடங்கள் வழங்கப்பட்டன. இந்தப் பெண் யாத்ரீகர்கள் மற்றும் அவர்களின் உடமைகளின் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புமிக்க பெண் ஒருங்கிணைப்பாளர்கள், ஹஜ் அதிகாரிகள், ஹஜ் உதவியாளர்கள் மற்றும் காதிம் உல் ஹுஜ்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், இந்தக் கட்டிடங்களில் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள்சுகாதாரப் பிரச்சினைகளைக் கவனிக்க நியமிக்கப்பட்டனர்.

சவூதி அரேபியாவில் எல்.டபிள்யூ.எம் பிரிவு யாத்ரீகர்கள் தங்கியிருக்கும் போது, தேவைப்படும் இடங்களில் அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 2023 ஆம் ஆண்டில் கர்நாடகாவில் இருந்து ஹஜ் சென்ற மொத்தம் 7,120 யாத்ரீகர்களில், மொத்தம் 119 பேர் எல்.டபிள்யூ.எம் பிரிவின் கீழ் இருந்தனர்.

இத்தகவலைமத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

***

ANU/PKV/IR/AG/KRS


(Release ID: 1986431) Visitor Counter : 104


Read this release in: Urdu , Hindi , English , Marathi