பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரின் முதலமைச்சராக பதவியேற்ற திரு விஷ்ணு தியோ சாய்க்கு பிரதமர் வாழ்த்து

துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு அருண் சாவ் மற்றும் திரு விஜய் சர்மா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 13 DEC 2023 6:10PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. விஷ்ணு தியோ சாய்க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுள்ள திரு அருண் சாவ் மற்றும் திரு விஜய் சர்மா ஆகியோருக்கும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சத்தீஸ்கர் முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஷ்ணு தியோ சாயக்கும், துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள அருண் சாவ், விஜய் சர்மா ஆகியோருக்கும் வாழ்த்துகள். கலாச்சார பாரம்பரியம் நிறைந்த இந்த மாநிலத்தில் உள்ள பிஜேபி அரசு மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மாநில மக்களின் வாழ்க்கையில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர இரட்டை இயந்திர அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. @vishnudsai @ArunSao3"

***

(Release ID: 1985959)
ANU/SM/BS/RS/KRS


(रिलीज़ आईडी: 1986037) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam