விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav g20-india-2023

விண்வெளித்துறை இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 13 DEC 2023 5:45PM by PIB Chennai

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை,  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் நடப்பு நிதியாண்டில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீட்டை ஈர்த்துள்ளன என்று தேசிய தொலைக்காட்சி மாநாட்டில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

"இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் இன்று சுமார் 8 பில்லியன் டாலராக உள்ளது. ஆனால் 2040 ஆம் ஆண்டில் இது பன்மடங்கு பெருகும் என்பது இந்தியாவின் கணிப்பு. ஆனால் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி, எடுத்துக்காட்டாக, சமீபத்திய .டி.எல் (ஆர்தர் டி லிட்டில்) அறிக்கையின்படி 2040-க்குள் 100 பில்லியன் டாலர் திறனைக் கொண்டிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இஸ்ரோ இதுவரை 430 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 290 மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாகவும், அமெரிக்க செயற்கைக்கோள்களை வியதன் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகவும் இஸ்ரோ வருவாய் ஈட்டியுள்ளது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடி விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைத் தொடங்கியதிலிருந்து இந்தியாவில் விண்வெளித் துறை ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். வெறும் நான்கு ஆண்டுகளுக்குள், விண்வெளித் துறையில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலிருந்து 1180 ஆக உயர்ந்துள்ளது. அதில் சில நிறுவனங்கள் லாபகரமான தொழில் நிறுவனங்களாக மாறியுள்ளன.

"தோல்வியுற்ற ரஷ்ய நிலவு திட்டத்திற்கு ரூ.16,000 கோடி செலவானது. எங்கள் (சந்திரயான் -3) திட்டத்திற்கு சுமார் ரூ.600 கோடி மட்டுமே செலவானது" என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் கடந்த ஒன்பது ஆண்டுகளில், குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் முன்னேறியுள்ளன, மேலும் அவை உலகெங்கிலும் பாராட்டப்படுகின்றன என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

----------

ANU/SMB/BS/RS/KRS



(Release ID: 1986013) Visitor Counter : 96


Read this release in: English , Urdu , Hindi