பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் ஒத்துழைப்பு குறித்த இந்தியா-போர்ச்சுகல் உயர் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது
Posted On:
13 DEC 2023 2:02PM by PIB Chennai
பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில் ஒத்துழைப்பு குறித்து மத்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், போர்த்துகீசிய குடியரசின் நிர்வாக நவீனமயமாக்கல் முகமை ஆகியவற்றுக்கு இடையே இரண்டாவது உயர் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் போர்ச்சுக்கல் பயணத்தின் போது, பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், போர்ச்சுகீசியக் குடியரசின் மாகாண மற்றும் நிர்வாக நவீனமயமாக்கல் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்தக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பொது நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் திரு வி.ஸ்ரீநிவாஸ் தலைமை வகித்தார். போர்ச்சுக்கல் நாட்டின் நிர்வாக நவீனமயமாக்கல் முகமையின் சர்வதேச உறவுகள் குழுவின் தலைவர் திருமதி சில்வியா எஸ்டெவ்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியக் குடியரசின் நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் போர்ச்சுக்கல் குடியரசின் நிர்வாக நவீனமயமாக்கல் முகமை ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் சேவை வழங்கலில் சிறந்து விளங்குவது குறித்த இந்தியா-போர்ச்சுகல் இணையவழி கருத்தரங்குகளை நடத்துவது குறித்தும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். வரும் மாதங்களில் உயர்நிலைப் பரிமாற்றங்கள் மூலம் உறவை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
***
SMB/IR/RR/KPG
(Release ID: 1985882)
Visitor Counter : 112