மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் 2022

இடுகை இடப்பட்ட நாள்: 12 DEC 2023 1:35PM by PIB Chennai

'அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் 2022' இன் முக்கிய அம்சங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன-

உற்பத்திப் பொருள்

2020-21

2021-22

% மாற்றம்

பால் உற்பத்தி

(மில்லியன் டன்கள்)

209.95

221.06

5.29

முட்டை உற்பத்தி

(பில்லியன் எண்கள்)

122.05

129.60

6.19

இறைச்சி உற்பத்தி

(மில்லியன் டன்கள்)

8.80

9.29

5.57

கம்பளி உற்பத்தி

(மில்லியன் கிலோ)

36.93

33.13

-10.29

பிரதான கால்நடை உற்பத்தி அதிகரித்துள்ளதோடு, மொத்த எண்ணிக்கையில் கால்நடைத் துறையின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது என்பதை இது குறிக்கிறது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இந்தப் புள்ளிவிவரங்களைக் கொண்டு தங்கள் திட்டத்தில் உள்ள விதிகளின்படி கொள்கைகளை உருவாக்குகிறது.

ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு என்ற திட்டத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அடிப்படைக் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்கள் ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றன. இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கால்நடைப் பராமரிப்புப் புள்ளிவிவரங்களை மேம்படுத்துவதற்காக வழிகாட்டுதல் தொழில்நுட்பக் குழுவால் மதிப்பீடு செய்யப்படுகிறது. இக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை கூடி இத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது.

 

இக்குழுவின் பரிந்துரைகள் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச கால்நடைப் பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு, அதன் அடுத்தடுத்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிக்கை தொழில்நுட்ப கண்காணிப்புக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதேபோன்று, கணக்கெடுப்பு முறை மற்றும் அதை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசங்களிலும் டி.எம்.சி அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

 

ANU/SMB/BS/RR/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1985493) வருகையாளர் எண்ணிக்கை : 149
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी