சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பற்றிய புதிய தகவல்கள்

Posted On: 08 DEC 2023 4:49PM by PIB Chennai

நாட்டில் உடல் உறுப்பு தான விகிதத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (நோட்டோ), பிராந்திய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் (ஆர்.ஓ.டி.ஓக்கள்) மற்றும் தேசிய உறுப்பு மாற்று திட்டத்தின் (என்.ஓ.டி.பி) கீழ் அமைக்கப்பட்ட மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புகள் (எஸ்.ஓ.டி.ஓக்கள்) ஆகியவற்றின் தகவல்களை பரப்புவது இதில் அடங்கும். மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டத்தை முற்றிலும் மீறும் வகையில், சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட உறுப்புதான செயல்முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உறுப்பு கடத்தலில் ஈடுபடுவதால் ஏற்படும் சட்டவிரோதம் மற்றும் பின்விளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நோட்டோ, ஆர்.ஓ.டி.ஓ மற்றும் எஸ்.ஓ.டி.ஓ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, உடல் உறுப்பு தானம், சமூக ஊடகங்கள் மூலம் "மக்கள் இயக்கமாக" ஊக்குவிக்கப்படுகிறது.  இது தொடர்பாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மைகோவ் தளத்தில் உறுதிமொழி பிரச்சாரம் மற்றும் வாக்கியப் போட்டியை நடத்தி வருகிறது. ஜூலை 2023 மாதத்தில் தொடங்கப்பட்ட "உறுப்புதானப் பெருவிழாவின்" ஒரு பகுதியாக, உடல் உறுப்பு தானம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பைத் தடுப்பதில் கவனம் செலுத்தும் வகையில் உறுப்பு மற்றும் திசு தானம் குறித்த முதலாவது தேசிய இணையவழி கருத்தரங்கு 2023, ஜூலை மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மருத்துவ வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொகுப்பு ஆயுஷ்மான் பாரத்தின் பி.எம்-ஜே.ஏ.ஒய் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய ஆரோக்கிய  நிதியின் (ஆர்.ஏ.என்) கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள நோயாளிகளுக்கு இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் மாற்று அறுவை சிகிச்சைக்கு அமைச்சகத்தால் ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது.

மக்களவையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகல் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

***

(Release ID: 1984045)

ANU/SMB/PKV/AG/KRS


(Release ID: 1984110) Visitor Counter : 148


Read this release in: English , Urdu , Hindi , Telugu