வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்குப் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்து இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 07 DEC 2023 5:02PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளில் (அதாவது 2014 – 2023 காலகட்டத்தில்) மொத்தம் 4950 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ரூ. 41,459 கோடி செலவில் உருவாக்கியுள்ளது.

மேலும், வடகிழக்கு சிறப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வடகிழக்கு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வடகிழக்குப் பகுதி மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 3372.58 கோடி மதிப்பிலான 77 சாலைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வடகிழக்குப் பிராந்தியத்தில் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் பலன்கள், அப்பகுதி மக்களை நாட்டின் பிரதான நீரோட்டத்துடன் ஒருங்கிணைக்கிறது.  அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களின் விரைவான போக்குவரத்து, அந்தப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, அப்பகுதியின் சமூக-பொருளாதார வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு போன்ற நன்மைகள் இதனால் அதிகரித்துள்ளன.

வடகிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

*****

 

ANU/AD/PLM/KV


(வெளியீட்டு அடையாள எண்: 1983955) வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese