சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மை சமூகங்களின் மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்
Posted On:
07 DEC 2023 3:34PM by PIB Chennai
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மையினத்தின் மூத்த குடிமக்கள் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குகளின் நலனுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. மூத்தக் குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்தக் குடிமக்களுக்கான மாநில செயல் திட்டம் , மூத்தக் குடிமக்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் தேசிய திட்டம் , மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் ஆகியவை மத்திய அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அடங்கும். இதுதவிர ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் மற்றும் பிரதமரின் வய வந்தனா திட்டம் ஆகியவை மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுபான்மையினர் நல அமைச்சகம் நாட்டின் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிறுபான்மை மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய நிதியுதவி திட்டமான பிரதமரின் ஜன் விகாஸ் திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இதன் கீழ் உள்ள முன்னுரிமைத் துறைகளில் சுகாதாரத் துறையும் அடங்கும். இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வசதிகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், சமூக சுகாதார மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமூக சேவை மையங்கள், வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் பயன்கள் மூத்த குடிமக்கள் உட்பட அனைத்து சமூகத்திற்கும் கிடைக்கின்றன.
இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*******
ANU/SMB/PKV/KV
(Release ID: 1983630)
Visitor Counter : 122