சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை

Posted On: 06 DEC 2023 3:43PM by PIB Chennai

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகிய அமைச்சகங்களின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மையினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

யு.ஜி.சி மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்-ன் இளநிலை ஆய்வாளர் ஃபெல்லோஷிப் (ஜே.ஆர்.எஃப்) திட்டம் சிறுபான்மையினர் உட்பட அனைத்து சமூகப் பிரிவுகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் உள்ளது.  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஃபெல்லோஷிப் திட்டங்கள் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பழங்குடியினருக்கான தேசிய ஃபெல்லோஷிப் திட்டம் ஆகியவற்றின் கீழ் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன் அடைகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் மாநில வாரியாக உதவித் தொகை வழங்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் அமைச்சகத்தின் இந்த இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. https://www.minorityaffairs.gov.in/.

இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

*****

(Release ID: 1983074)

ANU/SMB/PLM/KRS



(Release ID: 1983238) Visitor Counter : 47


Read this release in: English , Urdu , Hindi , Punjabi