புவி அறிவியல் அமைச்சகம்

கடலிலிருந்து மருந்துப் பொருள்கள் கண்டுபிடிக்கும் திட்டத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுத்தியுள்ளது: அமைச்சர் கிரண் ரிஜிஜு

Posted On: 06 DEC 2023 12:33PM by PIB Chennai

லக்னோவில் மத்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர் - சி.டி.ஆர்.ஐ) கடலிலிருந்து மருந்துப் பொருள்கள் கண்டுபிடிக்கும் திட்டத்தை புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆதரவுடன் செயல்படுத்தியது. இந்தத் திட்டம் 2020-ம் ஆண்டில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 2654 சேர்மங்கள் புற்றுநோய் எதிர்ப்பு, ஆஞ்சியோஜெனிக் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாடுகளுக்காக பரிசோதிக்கப்பட்டன.

சி.எஸ்.ஐ.ஆர் - சி.டி.ஆர்.ஐ தற்போது மருந்துத் துறையின் நிதி  ஆதரவுடன் "கடல் சிகிச்சை மையம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் சென்னையில் உள்ள தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.ஓ.டி) இந்தியக் கடல்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆழ்கடலில் நுண்ணுயிரிகளை வளர்ப்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது.

கடலிலிருந்து உயிரற்ற மற்றும் உயிருள்ள வளங்களைப் பெற்று அவை தொடர்பான பல்வேறு உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதே தேசியப் பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (என்ஐஓடி) முக்கிய நோக்கமாகும்.. கடந்த 3 ஆண்டுகளில் என்.ஐ.ஓ.டி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

•    யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் கல்பேனி, கடமத் மற்றும் அமினி தீவுகளில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை நிறுவ என்.ஐ.ஓ.டி.யின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

•    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நாளொன்றுக்கு 2 மில்லியன் லிட்டர் எல்.டி.டி.டி அணு உலை அமைப்பதற்கான விரிவான வடிவமைப்பு முடிக்கப்பட்டது.

•    மத்திய இந்தியப் பெருங்கடலில் 5270 மீட்டர் ஆழத்தில் என்ஐஓடி உருவாக்கிய ஆழ்கடல் சுரங்க இயந்திரத்தின் இயக்கத் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.

•    கேரளாவின் பூந்துரா கடற்கரையில் கடலோர பாதுகாப்புக்கான விரிவான பொறியியல் வடிவமைப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

•    மேற்கு வங்கக் கடற்கரை, தமிழகக் கடற்கரை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஆழமற்ற நீர் (0-30 மீட்டர் ஆழம்) அளவீடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

•    துருவப் பகுதிகளுக்கான செயலற்ற ஒலி கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி ஆர்க்டிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டது.

•    வானிலை மற்றும் கடலியல் தொடர்பான உடனடித் தகவல்களை வழங்குவதன் மூலம் இந்திய வானிலை முன்னறிவிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய மிதவை வலையமைப்பை என்.ஐ.ஓ.டி பராமரித்து வருகிறது.

•    என்.ஐ.ஓ.டி 4 ஆராய்ச்சிக் கப்பல்களை (சாகர் நிதி, சாகர் மஞ்சுஷா, சாகர் தாரா & சாகர் அன்வேஷிகா) பராமரித்து இயக்குகிறது.

இத்தகவலை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

****

ANU/SMB/PLM/KV



(Release ID: 1983168) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Telugu