சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பொறுப்புடனும், நிலைத்தன்மையுடனும் எப்படி வளர வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்கும்: மத்திய சுற்றுச்சூழல் துறைச் செயலாளர் திருமதி லீனா நந்தன்
இந்திய தட்பவெப்ப நிலைக்கு மிகவும் பொருத்தமான குளிர்விப்பான்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும்: திருமதி நந்தன்
Posted On:
03 DEC 2023 4:06PM by PIB Chennai
அனைத்து பருவநிலை இலக்குகளையும் அடைவதிலும் இந்தியா முனைப்புடன் செயல்படுவதாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் திருமதி லீனா நந்தன் இன்று (03.12.2023) தெரிவித்தார். துபாயில் சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டின்போது (சிஓபி 28), இந்திய அரங்கில் நடைபெற்ற "வெப்பநிலைக் குறைப்பில் நிலையான செயல்பாடுகளை நோக்கிய இந்தியாவின் பயணம்" என்ற நிகழ்வில் அவர் பேசினார். தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் அடிப்படையில் இந்தியாவின் தற்போதைய நிலை சிறப்பாக உள்ளது என்று கூறினார்.
2030 க்குள் 33 முதல் 35 சதவீத கார்பன் உமிழ்வு தீவிரத்தை குறைக்க இந்தியா திட்டமிட்டு செயல்படுவதாகவும், பெரிய அளவில் அதற்கு முயற்சி எடுத்துள்ளதாகவும் கூறினார். இந்தியா தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவநாக அவர் தெரிவித்தார். இதன் விளைவாக 2019-ம் ஆண்டிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உமிழ்வு தீவிரம் 33 சதவீதம் குறைக்கப்பட்டது என அவர் கூறினார். இந்தியா தனது தேவைகளுக்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அளித்துள்ள முக்கியத்துவமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியா பிரச்சினையை உருவாக்கவில்லை என்றும் ஆனால், பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
கூலிங் ஆக்சன் பிளான் எனப்படும் வெப்பநிலையை குறைத்து குளிரூட்டல் செயல் திட்டத்தில் இந்தியா பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொறுப்புணர்வுடனும், நிலைத்தன்மையுடனும் எவ்வாறு வளர வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை உலகுக்கு இந்தியா வழங்கும் என்று அவர் கூறினார். முன்னோடித் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று திருமதி லீனா நந்தன் தெரிவித்தார்.
*******
ANU/AD/PLM/DL
(Release ID: 1982143)
Visitor Counter : 103