சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தவறான தகவல்களும் உண்மைகளும்
தேசிய சுகாதார இயக்கத்தின் செயல்பாட்டில் மத்திய அரசுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விதிகள் மற்றும் பிற வழிகாட்டுதல்களை மேற்கு வங்கம் கடைப்பிடிக்கவில்லை
Posted On:
03 DEC 2023 12:24PM by PIB Chennai
மேற்கு வங்கத்திற்கு தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) கீழ் நிதியை விடுவிப்பதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது குறித்தும், மேற்கு வங்க முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியது குறித்தும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியின் பின்னணி குறித்து இதன் மூலம் தெளிவான விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆயுஷ்மான் பாரத் - சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கான வழிகாட்டுதல்கள் மே 30, 2018 தேதியிட்ட வெளியிடப்பட்டுள்ளன.
தேசிய சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசுக்கும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளின்படி, தேசிய சுகாதார இயக்கத்தின் செயலாக்க கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அவ்வப்போது வழங்கப்படும் பிற வழிகாட்டுதல்களின்படி அமைவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தை செயல்படுத்துவது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கையேடுகள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் அனைத்தையும் மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டும். அவை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகளுக்கு முரணாக இல்லை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். கூடுதலாக, செலவினத் துறையின் வழிகாட்டுதல்களின்படி, 2023-24 மூலதன முதலீட்டிற்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவிக்கான திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை மாநிலங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
அதில் திட்ட வழிகாட்டுதல்களின் பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய நிபந்தனைகளில் ஒன்று பின்வருமாறு:
"அனைத்து மத்திய அரசு நிதியுதவி திட்டங்களின் (சி.எஸ்.எஸ்) அதிகாரப்பூர்வ பெயர் (உள்ளூர் மொழிக்கு சரியான மொழிபெயர்ப்பு அனுமதிக்கப்படுகிறது) மற்றும் அனைத்து அமைச்சகங்களின் அனைத்து திட்டங்களிலும் பொது சேவைத் திட்டங்களை முத்திரையிடுவது தொடர்பாக மத்திய அரசால் வெளியிடப்பட்ட எந்தவொரு வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும்"
மார்ச் 31, 2023 மற்றும் மே 11, 2023 ஆகிய தேதிகளில் சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், வழிகாட்டுதல்களுக்கு இணங்கி செயல்படுவது குறித்து பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 12, 2023, பிப்ரவரி 8, 2023, மார்ச் 3, 2023 மற்றும் ஏப்ரல் 24, 2023 ஆகிய தேதிகளில் இணைச் செயலாளர் (கொள்கை) கூட்டங்களை நடத்தியுள்ளார். 2023 பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் அனைத்து உயர் சுகாதார நிலையங்களிலும் பிராண்டிங்-கை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. மார்ச் 31, 2023 க்குள் அனைத்து எச்.டபிள்யூ.சி.-களிலும் பிராண்டிங் நடைமுறைக்கு இணங்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செயலாளரின் (எச்.எஃப்.டபிள்யூ) மற்றொரு கடிதம் அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக மேற்கு வங்கத்துக்கும் பல தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஏப்ரல் 11, 2023 அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளரிடமிருந்து மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதைக் கட்டாயமாக்கும் என்.எச்.எம் கட்டமைப்பின்படி மாநில அரசு இந்திய அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏபி-எச்.டபிள்யூ.சி.-களின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கான ஆய்வின் போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் விஷயத்தில் பிராண்டிங் தேவைகளுக்கு மேற்கு வங்க அரசு இணங்கவில்லை என்பது தெரிய வந்தது. மேலும், நவம்பர் 3, 2023 தேதியிட்ட கடிதத்தில், மத்திய அரசின் விதிமுறைகளின்படி பிராண்டிங் வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்றவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக,செலவினத் துறை 19.09.23 தேதியிட்ட கடிதத்தின் மூலம், ஏபி-எச்.டபிள்யூ.சி உள்ளிட்ட மத்திய அரசு நிதியுதவி பெறும் திட்டங்களில் பிராண்டிங் நடைமுறைக்கு இணங்காதது குறித்து மாநிலத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. 2023 நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் திட்ட அமலாக்கத்தை (பிஐபி) பரிசீலிக்க நடைபெற்ற தேசிய திட்ட ஒருங்கிணைப்புக் குழு (என்.பி.சி.சி) கூட்டத்தில், பிராண்டிங் வழிகாட்டுதல்களுக்கு இணங்காதது குறித்த பிரச்சினை மீண்டும் எடுத்துக் கூறப்பட்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல கவுன்சில் (சி.சி.எச்.எஃப்.டபிள்யூ) என்பது, அரசியலமைப்பின் 263 வது பிரிவின் கீழ் கொள்கை உருவாக்கத்தில் அரசுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கும், சுகாதாரம் தொடர்பான விஷயங்கள் தொடர்பாக பரந்த அளவிலான கொள்கைகளை பரிசீலித்து பரிந்துரைப்பதற்கும் அமைக்கப்பட்ட ஒரு உயர் ஆலோசனை அமைப்பாகும். அனைத்து மாநிலங்களின் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். மே 2022-ல் குஜராத்தில் நடைபெற்ற மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14-வது கூட்டத்திற்கு எந்தவொரு பிரதிநிதியையும் அனுப்பாத ஒரே மாநிலம் மேற்கு வங்கம் மட்டுமே. ஜூலை 2023-ல் உத்தராகண்டில் நடைபெற்ற சி.சி.எச்.எஃப்.டபிள்யூ-வின் 15 வது கூட்டத்திலும், மூத்த அளவிலான பங்கேற்பு இல்லை. மத்திய அரசின் திட்டமான நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் (விக்சித் பாரத் சங்கல்ப்) யாத்திரையிலும் மேற்கு வங்க மாநில அரசு பங்கேற்கவில்லை. குடியரசுத்தலைவரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ இயக்கத்தின் சில நடவடிக்கைகளில் மேற்கு வங்கம் ஓரளவு பங்கேற்றுள்ளது. ஆனால் இந்த இயக்கத்தின் கீழ் திட்டமிடப்பட்டபடி சுகாதார முகாம்களை நடத்தவில்லை.
*******
ANU/AD/PLM/DL
(Release ID: 1982078)
Visitor Counter : 77