மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

"இந்தியாவின் இளம் ஸ்டார்ட்அப்கள் இன்று, இந்திய சந்தை மற்றும் உலகத்திற்கான சாதனங்கள், ஐபி தயாரிப்புகள், தீர்வுகள் மற்றும் தளங்களை வடிவமைக்கின்றன": மத்திய இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்

Posted On: 01 DEC 2023 5:05PM by PIB Chennai

2023, நவம்பர் 30 அன்று  நடைபெற்ற 26 வது பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஏஎம்டி இந்தியாவின் சிலிக்கான் வடிவமைப்பு பொறியியல் மூத்த துணைத் தலைவர் திருமதி ஜெயா ஜெகதீஷுடன் கலந்துரையாடினார். இந்தியாவின் வளர்ந்து வரும் செமிகண்டக்டர் தொழில், செயற்கை நுண்ணறிவு மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் ஸ்டார்ட்அப்கள் வகிக்கும் முக்கிய பங்கு குறித்த தனது எண்ணங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

செமிகான் இந்தியா 2023 உச்சிமாநாட்டை நினைவு கூர்ந்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளிப்படுத்தியபடி, இந்தியாவின் துடிப்பான மாற்றத்தை எடுத்துரைத்தார்.

கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில், நமது தொழில்நுட்ப பொருளாதாரம் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதற்கான ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பாக  செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ், வெப் 3, சூப்பர் கம்ப்யூட்டர், உயர் செயல்திறன் கம்ப்யூட்டிங் என எதுவாக இருந்தபோதிலும் அதனை பிரதிநிதித்துவப் படுத்துகிறது என்று அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

 

***

ANU/AD/BS/AG/KPG



(Release ID: 1981639) Visitor Counter : 75