பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராக (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே பொறுப்பேற்றார்

Posted On: 01 DEC 2023 9:30AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராக (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே 2023, டிசம்பர் 01 அன்று பொறுப்பேற்றார்.

புதுதில்லியில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்லூரி, ஃபிரான்சின் பாரிஸில் உள்ள இன்டர் ஆர்மி டி டிஃபென்ஸ் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் மாணவரான ஏர் மார்ஷல், 1986  டிசம்பர் 06  அன்று இந்திய விமானப்படையின் போர் பிரிவில் நியமிக்கப்பட்டார். 36 ஆண்டுகளுக்கும் மேலான தனது பணிக்காலத்தில், முக்கிய கள மற்றும் அலுவலர் ரீதியான பதவிகளை ஏர் மார்ஷல் வகித்துள்ளார். ஒரு போர்ப் படைப்பிரிவு மற்றும் இரண்டு விமானப்படை விமான நிலையங்களிலும்  பணியாற்றியிருக்கிறார். போர் உத்தி மற்றும் வான் போர் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி ஆகியவற்றில் வழிநடத்தும் அலுவலராக இருந்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் விமான இணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். விமானப்படை தலைமையகத்தில்  இயக்குநர், பணியாளர் அதிகாரி, முதன்மை இயக்குநர், விமானப் பணியாளர் ஆய்வு இயக்குநரகம் மற்றும் விமானப் பணியாளர் நடவடிக்கைகளின் (விண்வெளி) உதவித் தலைவர்  ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். அவரது தற்போதைய நியமனத்திற்கு முன், புதுதில்லியில் உள்ள தலைமையக மேற்கு விமான கமாண்டில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்தார்.

இவருக்கு 2006 ஆம் ஆண்டில் வாயு சேனா பதக்கமும்  2020 ஆம் ஆண்டில் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.

38 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பு சேவைக்குப் பிறகு 2023, நவம்பர் 30 அன்று சஞ்சீவ் கபூர் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஏர் மார்ஷல் மகரந்த் ரானடே பொறுப்பேற்றுள்ளார்.

***

ANU/SMB/BS/AG/KPG


(Release ID: 1981451) Visitor Counter : 154