பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்த ரூ. 2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைகளுக்கு பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
30 NOV 2023 4:13PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு தளவாட கொள்முதல் குழுமம் ரூ.2.23 லட்சம் கோடி மதிப்புள்ள தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான பரிந்துரைக்கு 2023, நவம்பர் 30 அன்று ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.2.20 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். 'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை நோக்கிய பயணத்தையொட்டி இது பாதுகாப்புத் துறைக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் .
டாங்கிகள், கவச வாகனங்கள் மற்றும் எதிரி வீரர்களை செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட ஏரியா டெனிஷன் வெடிமருந்து (ஏ.டி.எம்) வகை -2, வகை -3 ஆகிய டாங்கி எதிர்ப்பு வெடிமருந்துகளை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவத்திற்கு இலகுரக போர் ஹெலிகாப்டர் மற்றும் இந்திய விமானப்படைக்கு இலகுரக போர் விமானம் எம்.கே 1 ஏ ஆகியவற்றை வாங்குதல் பிரிவின் கீழ் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தளவாடங்களை வாங்குவது இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலத்தை அளிக்கும் என்றாலும், உள்நாட்டுப் பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் நிறுவனங்களிடமிருந்து வாங்குவது உள்நாட்டு திறனை ஒரு புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும். இது வெளிநாட்டு இறக்குமதியை சார்ந்திருப்பதையும் கணிசமாகக் குறைக்கும்.
*************
(Release ID: 1981135)
ANU/SMB/IR/RR/KRS
(Release ID: 1981330)
Visitor Counter : 146