பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேலைவாய்ப்பு விழாவின் கீழ், அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000- க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்களை நவம்பர் 30 அன்று பிரதமர் வழங்குகிறார்


வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு தடமாக வேலைவாய்ப்பு விழா உள்ளது

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்குப் பங்களிக்க புதிய நியமனங்கள்

புதிதாகப் பணியில் சேர்பவர்கள் கர்மயோகி பிராரம்ப் என்ற ஆன்லைன் பாடப்பிரிவின் மூலம் பயிற்சி பெற உள்ளனர்

Posted On: 28 NOV 2023 5:03PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி 2023 நவம்பர் 30 அன்று மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் புதிதாகச் சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோரின் நியமனக் கடிதங்களை வழங்குகிறார். இந்நிகழ்வில் நியமிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

நாடு முழுவதும் 37 இடங்களில் வேலைவாய்ப்பு விழா நடைபெற உள்ளது. இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்புகள் நடைபெறுகின்றன. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் புதியவர்கள் அரசின் வருவாய்த் துறை, உள்துறை அமைச்சகம், உயர் கல்வித் துறை, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, நிதி சேவைகள் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் சேர்வார்கள்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரு தடம்தான் வேலைவாய்ப்பு விழா. மேலும் இது வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதிதாக நியமிக்கப்படுகின்றவர்கள் தங்கள் புதுமையான யோசனைகள் மற்றும் பாத்திரம் தொடர்பான திறன்களுடன், நாட்டின் தொழில்துறை, பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை வலுப்படுத்தும் பணியில் பங்களிப்பு செய்வார்கள். இது பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்குப் பார்வையை அடைய உதவும்.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அங்கு 800 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் 'எங்கும் எந்த சாதனத்திலும்' கற்றல் வடிவத்திற்கு கிடைக்கின்றன.

***

ANU/SMB/PKV/RR/KPG

 


(Release ID: 1980485) Visitor Counter : 186