பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆயுதப்படை மருத்துவக் கல்லூரியின் பவள விழா ஆண்டில் டிசம்பர் 01 அன்று குடியரசுத் தலைவரின் கொடியைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்குகிறார்

Posted On: 27 NOV 2023 12:10PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவரும் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதியுமான திருமதி திரௌபதி முர்மு, புனேவில் உள்ள ஆயுதப்படை மருத்துவக் கல்லூரிக்கு (.எஃப்.எம்.சி) அதன் பவள விழா ஆண்டில் 2023,   டிசம்பர் 01 வெள்ளியன்று குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குகிறார். .எஃப்.எம்.சி ஒரு முதன்மை ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (.எஃப்.எம்.எஸ்) நிறுவனமாகும் மற்றும் நாட்டின் முன்னணி மருத்துவக்  கல்லூரிகளில் ஒன்றாகும். .எஃப்.எம்.சி.யின் 75 ஆண்டுகால தேசத்திற்கான முன்மாதிரி சேவைக்கு இந்த விருது ஒரு சான்றாகும்.

 

           இந்தப் பிரமாண்டமான விழாவில் சிறப்பு உறை, அஞ்சல்தலை  மற்றும் நினைவு நாணயம் குடியரசுத் தலைவரால் வெளியிடப்படவுள்ளதுசெயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதிநவீன சுகாதார ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் .எஃப்.எம்.சி.யை இணைக்கும் கணக்கீட்டு மருத்துவத்திற்கான ஆயுதப்படை மையமான 'பிரஜ்னா'வையும் குடியரசுத் தலைவர் மின்னணு முறையில் திறந்து வைக்கிறார்

 

          .எஃப்.எம்.சி.யில் உள்ள கேப்டன் தேவாஷிஷ் சர்மா கீர்த்தி சக்ரா அணிவகுப்பு மைதானத்தில் இந்த கண்கவர் நிகழ்வு நடைபெறும்அணிவகுப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பணியாற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவை பணியாளர்களின் நான்கு பிரிவுகளுக்கு பெண் மருத்துவ அதிகாரிகள் தலைமை தாங்குவார்கள். இது .எஃப்.எம்.எஸ்ஸில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதைக் குறிக்கிறது.

 

           ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் மருத்துவ கல்வியின் ஊற்றுக்கண்ணான .எஃப்.எம்.சி, அதன் நெறிமுறைகள் மற்றும் உயர்தர மருத்துவப் பயிற்சிக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இக்கல்லூரியின் சிறப்பான பயிற்சி மற்றும் நிர்வாக உள்கட்டமைப்பு மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டு மற்றும் பாடத்திட்டம் சாராத செயல்பாட்டு கழகங்கள் மூலம் மருத்துவ மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்புகளையும் வழங்குகிறதுஒரு அதிகாரியாகவும், மருத்துவராகவும் விடாமுயற்சியுடன் பணியாற்றும் அவர்கள், நமது பெருமைமிக்க நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியில் இருப்பவர்களின் சுகாதாரத் தேவைகளை மட்டுமல்லாமல், அவர்களின் குடும்பத்தினருக்கான சுகாதாரத் தேவைகளையும் தவறாமல் முன்மாதிரியாக நிறைவேற்றியுள்ளனர். இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சுகாதார விநியோகம் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்புகளைச் செய்துள்ளனர். பல்வேறு புகழ்பெற்ற தேசிய மற்றும் சர்வதேச சுகாதார நிறுவனங்களில் பணியாற்றியுள்ளனர் / சேவை செய்கிறார்கள்.

 

        இந்தப் புகழ்பெற்ற விழாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் ஆயுதப்படைகளின் மூத்த பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். முன்னாள் கமாண்டன்ட்கள், முன்னாள் டீன் மற்றும் துணை கமாண்டன்ட்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

*********

(Release ID: 1980104)

 

PKV/BR/KRS
 




(Release ID: 1980143) Visitor Counter : 120