தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அடிப்படை மனித மாண்பை மதிக்க வேண்டும்; அப்படிச் செய்தால் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் போய்விடும்- சந்தீப் குமார், இயக்குநர், 'ஆராரிராரோ’

Posted On: 26 NOV 2023 8:33PM by PIB Chennai

கோவாவில் இன்று நடைபெற்ற 54-வதுஇந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் (.எஃப்.எஃப். 54) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆராரிராரோ கன்னட படத்தின் இயக்குநர் சந்தீப் குமார் வி கூறுகையில், இத்திரைப்படம் அதன் பார்வையாளர்களை உணர்வுபூர்வமாக்கும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அடிப்படை மனித மாண்பை புரிந்து கொண்டு  அதை மதித்து நடந்தால், உலகில் ஏற்றத்தாழ்வுகள் ஒழியும். சமூகத்தால் கவனிக்கப்படாத, ஆனால் துன்ப காலங்களில் உணர்ச்சி ரீதியாக பின்னிப் பிணைந்திருக்கும் இரண்டு சாதாரண நபர்களைப் பற்றிய படம் இதுஎன்று அவர் கூறினார். 16 நாட்கள் படமாக்கப்பட்ட  இத்திரைப்படம், விதியால் ஒன்றிணைக்கப்பட்ட இரண்டு நபர்களைப் பற்றியது. தவிர்க்க முடியாத உணர்வுப்பூர்வமான சிக்கல் இந்த அழகாக பின்னப்பட்ட கதையின் சாராம்சமாக அமைகிறது.

ஒரு நடிகராக தனது அர்ப்பணிப்பு மற்றும் படத்திற்காக அவர் மேற்கொண்ட தயாரிப்பு குறித்து பேசிய முன்னணி நடிகர் பிரசன்னா ஷெட்டி, கவனச்சிதறலைத் தவிர்ப்பதற்காக, இரண்டு வருட காலத்திற்கு இந்த திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என்று வலியுறுத்தினார். "இயக்குநர் முதல் வரியைச் சொன்னபோதே இந்தப் படத்தைப் பற்றி நான் உறுதியாக நம்பினேன். படத்தின் முதல் வரியை எழுதும் பணியில் இருந்து படம்  வெளியாகும் வரை ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தில் ஈடுபட்டேன். நான் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு வசனத்தையும் எழுதும்போது இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளருடன் இருந்தேன்", என்று அவர் மேலும் கூறினார்.

 

தனது திரைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்திய சந்தீப் குமார், "சில ஆக்கப்பூர்வமான கூறுகளை செயற்கை நுண்ணறிவால் மட்டுமே அடையவோ உருவாக்கவோ முடியாது. இருப்பினும், கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக எனது படங்களில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை என்பதை நான் உறுதி செய்கிறேன், என்றார் அவர்.

ஆச்சரியம் மற்றும் இலகுவான தருணங்களுடன், 'ஆராராரோ' திரைப்படம் அதன் கதை மற்றும் உணர்ச்சிகரமான அம்சங்களால் பார்வையாளர்களைக் கவரும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. இத்திரைப்படம், வெறும் போதனையாக இல்லாமல், அது தெரிவிக்கும் செய்தியில் ஒரு பரந்த அர்த்தத்தை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  

 

பிராந்திய திரைப்படத்தின் செழுமையை பறைசாற்றும் வகையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் படங்களை திரைப்படத்  திருவிழாவில் திரையிட பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியன் பனோரமாதிரைப்பட  பிரிவின் கீழ் 54வது .எஃப்.எஃப்.-யில் 125 நிமிடங்கள் ஓடக்கூடிய 'ஆராரிராரோ' திரையிடப்படுகிறது.

நடிகர்கள் & குழுவினர்:-

 

இயக்குநர்: சந்தீப் குமார். வி

தயாரிப்பு: டி.எம்.டி புரொடக்ஷன்ஸ்

எழுத்தாளர்: தேவிபிரசாத் ராய்

ஒளிப்பதிவாளர்: மயூர் ஷெட்டி

தொகுப்பாளர்: மகேஷ் யென்மூர்

நடிப்பு - பிரசன்னா ஷெட்டி, ஜீவா, நிரிக்ஷா ஷெட்டி

 

இயக்குநர் பற்றிய கூடுதல் தகவல்:

 

சந்தீப் குமார், ஒரு திரைப்பட இயக்குனர், கதைசொல்லி மற்றும் காட்சி படைப்பாளி ஆவார். இவரது முதல் படம் 'நந்தனவனடோல்' (2019).  அதைத் தொடர்ந்து 'ஆராராரோ' (2023) திரைப்படத்தையும், சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

 

கலந்துரையாடலை  இங்கே காணலாம்:

 https://www.facebook.com/pibindia/videos/862745168725025/?mibextid=YxdKMJ  

* * *

 

(வெளியீட்டு ஐடி: 1980029)

PKV/BR/KRS



(Release ID: 1980092) Visitor Counter : 114