தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் 'சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருது' போட்டியில் ஏழு படங்கள் போட்டியிடுகின்றன

கோவாவில் நடைபெறும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுக இயக்குநர் பிரிவில் 7 படங்கள் பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்படுகின்றன. இந்தப் பிரிவு வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அவர்களின் சிறந்த திரைப்படங்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

இந்த ஆண்டு இந்தப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படங்கள்:

அல்மோஸ்ட் என்டைர்லி எ ஸ்லைட் டிசாஸ்டர்: உமுத் சுபாஸால் இயக்கப்பட்ட இந்த துருக்கிய திரைப்படம் இஸ்தான்புல்லில் உள்ள நான்கு நபர்களின் வாழ்க்கையை ஆராய்கிறது. புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளும் கவலைகளுடன் நகைச்சுவையை சாமர்த்தியமாக இந்தப் படம் இணைத்துள்ளது.

லெட் மீ கோ: மாக்சிம் ராப்பாஸ் இயக்கிய இந்தப் படம் சுவிட்சர்லாந்தில் கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் கேன்ஸ்  திரைப்பட விழா, ஸ்டாக்ஹோம் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இடம்பெற்றது.

ஒகாரினா: அல்பான் ஜோக்ஜானி இயக்கிய அல்பேனியத் திரைப்படமான ஒகாரினா, ஒரு புதிய நாட்டிற்குச் செல்லும்போது வாழ்க்கை முறை மாற்றத்தால் எழும் குடும்பப் பிரச்சினைகளின் கதையாகும்.

ஸ்லீப்: ஜேசன் யூவின் என்ற இயக்குநரால் இயக்கப்பட்ட இந்தத் தென் கொரிய திரைப்படம் ஒரு கர்ப்பிணி மனைவியின் கதையைச் சொல்கிறது.

 

வென் தி சீட்லிங்ஸ் குரோ: துருக்கிய திரைப்பட இயக்குநர் ரீகர் ஆசாத் கயா இயக்கிய இந்த திரைப்படம் கோபானேவில் உள்ள ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றி சுழல்கிறது, அவர்களின் வாழ்க்கை மற்றும் சமூகத்தின் மீது போரின் விளைவுகளையும் இது இணைக்கிறது.

தாய் ஆகர்: அம்ரிக் சிங் தீப்பின் 'தீர்த்தன் கே பாத்' நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரவீன் அரோரா இயக்கிய இந்தி திரைப்படமான இது 1980-களில் உத்தராகண்ட் மாநிலத்தில் நடக்கும் கதை ஆகும்.  பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அழுத்தமான செய்தியுடன் காதலை ஒரு விடுதலை சக்தியாக இந்தப் படம் வலியுறுத்துகிறது.

இரட்டா: ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கிய இந்திய மொழியான மலையாளத் திரைப்படமான இரட்டா, காவல் துறையில் பணிபுரியும் இரட்டையர்கள், அதில் ஒருவரின் மரணம் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை விவரிக்கிறது.

 

*****

ANU/PKV/PLM/DL

iffi reel

(Release ID: 1979811) Visitor Counter : 129