தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
1 4

54-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் '75 நாளைய படைப்பாற்றல் சிந்தனையாளர்கள்' பிரிவில் சிறந்த குறும்படத்திற்கான விருதை 'ஓட்' வென்றது

கோவாவில் நடைபெற்று வரும் 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இன்று நடைபெற்ற விழாவில் '75 நாளைய படைப்பாற்றல் சிந்தனையாளர்கள்' (75 Creative Minds of Tomorrow -CMOT) பிரிவுக்கான விருது வழங்கும் விழாவில் சிந்தனையைத் தூண்டும் குறும்படமான 'ஓட்' (Odh) சிறந்த குறும்படத்திற்கான விருதை வென்றது.

வெற்றியாளர்களை பாராட்டிப் பேசிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளரும், தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமான என்.எஃப்.டி.சி-யின் நிர்வாக இயக்குநருமான திரு பிரிதுல் குமார், திரைப்படத் தயாரிப்பில் சிறந்த உள்ளடக்கத்தை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். நாடு  முழுவதும் உள்ள இளம் படைப்பாளிகளுக்கு இந்த சி.எம்.ஓ.டி சிறந்த தளமாகும் என்று அவர் கூறினார். இதன் மூலம்  அவர்கள் ஊக்கவிக்கப்படுவதால், நல்ல உள்ளடக்கத்துடன் திரைப்படங்களை உருவாக்க அவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

விழாவில் பேசிய 75 சிஎம்ஓடி-யின் நடுவர்களில் ஒருவரான இயக்குநர் ஷூஜித் சிர்கார், 'தி மிஷன் லைஃப்' என்ற தலைப்பில் 48 மணி நேரத்தில் ஒரு குறும்படம்   உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது ஆச்சரியப்படத்தக்கது என்று தெரிவித்தார்.

போட்டியில் பங்கேற்ற அனைத்து படங்களின் குழு உறுப்பினர்களையும் வாழ்த்திய திரு ஷூஜித் சிர்கார், அனைத்து படங்களும் மிகவும் சிறப்பானவை மற்றும் சிந்தனையைத் தூண்டுபவை என்றார். அனைவரும் ஒரு வகையில், வெற்றியாளர்கள் தான் என அவர் தெரிவித்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் சிந்தனையில் உருவான இந்த  சி.எம்..டி., முயற்சி திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் இந்தியாவின் சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் விடுதலைப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த முயற்சி தொடங்கப்பட்டது.

ஓட் (ODH) படம்  பற்றி: மார்செலின் என்ற மீனவர், படகை நிறுத்துவதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் தனது படகை நகரின் நடுப்பகுதிக்கு கொண்டு செல்கிறார். கடற்கரை திருடப்பட்டு விட்டதாகவும், அங்கு நிறுத்த இடம் இல்லை என்றும் அவர் புகார் கூறுகிறார். கடற்கரைகளில் நடக்கும் மிகப்பெரிய கட்டுமான நடவடிக்கைகள் குறித்தும், கடல் மட்டம் உயர்வது குறித்தும் இப்படம் பேசுகிறது.

 

* * *

ANU/AD/PLM/RS/KRS

Release ID: 1979547)




(Release ID: 1979586) Visitor Counter : 115