மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொகுப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும், வளரும் நாடுகளின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த சமூகத் தாக்கத்திற்கான நிதியை உருவாக்கியிருப்பதாகவும் பிரதமர் அறிவித்தார்
प्रविष्टि तिथि:
23 NOV 2023 4:47PM by PIB Chennai
2023, நவம்பர் 22 அன்று நடைபெற்ற மெய்நிகர் ஜி 20 தலைவர்கள் உச்சிமாநாட்டின் போது, வளரும் நாடுகளில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்த சமூகத் தாக்கத்திற்கான நிதியத்தின் வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொகுப்பு, சமூகத் தாக்கத்திற்கான நிதியம் ஆகிய இந்தியா தலைமையிலான இரண்டு முன்முயற்சிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்தார்.
இதற்கு இந்தியா 25 மில்லியன் அமெரிக்க டாலர் தொடக்க உறுதிப்பாட்டை உறுதிசெய்துள்ளது. வளரும் நாடுகளில் டிபிஐ அமலாக்கத்தை விரைவுபடுத்த அரசு தலைமையிலான, பன்முக முயற்சியாக சமூகத் தாக்கத்திற்கான நிதியம் கருதப்படுகிறது. இந்த நிதி டிபிஐ அமைப்புகளை மேம்படுத்துவதில் நாடுகளுக்கு மேல்நிலை தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத உதவிகளை வழங்கப் பயன்படும். பிற அரசுகள், சர்வதேச அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களுக்கும் இந்த நிதியத்திற்குப் பங்களிக்கவும், டிபிஐக்கள் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் (எல்.எம்.ஐ.சி) நிலையான வளர்ச்சி இலக்குகளை (எஸ்.டி.ஜி) அடைவதை விரைவுபடுத்த உதவவும் சமூகத் தாக்கத்திற்கான நிதியம் ஒரு தளத்தை வழங்குகிறது.
***
ANU/PVK/SMB/AG/KV
(रिलीज़ आईडी: 1979168)
आगंतुक पटल : 262