பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

प्रविष्टि तिथि: 23 NOV 2023 2:57PM by PIB Chennai

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையே பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2023, நவம்பர் 23 அன்று புதுதில்லியில் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் , பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைப் பணியாளர் குழுவின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ , அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் (டி.எஸ்..ஆர்) செயலாளர் டாக்டர் என்.கலைச்செல்வி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

இந்தியப் பாதுகாப்பு பணியாளர் தலைமையகம், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் , அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி குழும  ஆய்வகங்கள், இந்திய பாதுகாப்பு பணியாளர்கள் தலைமையகம் மற்றும் ஆயுதப்படைகளான இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு இடையே கூட்டுத்தொடர்புகளைத் தொடங்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது .
 

***

ANU/PKV/IR/RS/KRS

(Release ID: 1979052)


(रिलीज़ आईडी: 1979165) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Urdu , English , हिन्दी