பாதுகாப்பு அமைச்சகம்

ஆஸ்ட்ராஹிந்த் -23 கூட்டு ராணுவப் பயிற்சிக்காக இந்திய ராணுவக்குழு புறப்பட்டது

Posted On: 22 NOV 2023 2:45PM by PIB Chennai

ஆஸ்ட்ராஹிந்த் - 23 கூட்டு ராணுவப் பயிற்சிக்காக 81 வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவக்குழு இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெற உள்ளது.

இந்திய ராணுவக்குழுவில் கோர்கா ரைபிள்ஸ் பட்டாலியனைச் சேர்ந்த 60 வீரர்கள் உள்ளனர். ஆஸ்திரேலிய ராணுவக் குழுவில் 13-வது படைப்பிரிவைச் சேர்ந்த 60 பேர் கொண்ட வீரர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், இந்திய விமானப் படையைச் சேர்ந்த 20 வீரர்களும் பங்கேற்க உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் ராயல் ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையைச் சேர்ந்த தலா 20 வீரர்கள் இடம்பெறுவார்கள்.

ஆஸ்ட்ராஹிந்த் முதல் பயிற்சி ராஜஸ்தானின் மகாஜனில் 2022-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.  ஒவ்வொரு ஆண்டும், இரு நாடுகளில் ஒரு நாட்டில் மாற்றி மாற்றி இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே புரிந்துணர்வை மேம்படுத்தவும், நட்பு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்தப் பயிற்சி உதவும்.

----------

ANU/PKV/IR/RS/KPG



(Release ID: 1978879) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Marathi , Hindi