குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

2023 நவம்பர் 20 முதல் 22 வரை ஒடிசா மற்றும் ஆந்திராவுக்குக் குடியரசுத் தலைவர் பயணம்

Posted On: 19 NOV 2023 2:01PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2023 நவம்பர் 20 முதல் 22 வரை ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார் .

ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்வில் நவம்பர் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். அதே நாளில், குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியையும் அவர் திறந்து வைக்கிறார்.  

பஹத்பூர் கிராமத்தில் திறன் பயிற்சி மையத்தை நவம்பர் 21 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திறந்து வைப்பார்.  அதைத் தொடர்ந்து, அவர் பதம்பஹார் ரயில் நிலையத்திற்குச் செல்கிறார், அங்கிருந்து பதம்பஹார் - டாடாநகர் மெமு ரயில், பதம்பஹார்-ரூர்கேலா வாராந்திர எக்ஸ்பிரஸ்;  பதம்பஹார் - ஷாலிமார் வாராந்திர எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களைக்  கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

புதிய ரைரங்பூர் அஞ்சல் கோட்டம் திறப்பு, ரைரங்பூர் அஞ்சல் கோட்டத்தின் நினைவு அட்டை வெளியிடுதல் ஆகிய நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கிறார். பதம்பஹார் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான திட்டப்பணிக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர்  அவர் பதம்பஹரில் இருந்து ரைரங்பூருக்கு பதம்பஹார்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்கிறார். அன்று மாலை, புர்லாவில் உள்ள வீர் சுரேந்திர சாய் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் 15வது ஆண்டுப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர்  கலந்து கொள்கிறார்.

நவம்பர் 22 ஆம் தேதி, சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகள் ஏற்பாடு செய்துள்ள புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி என்ற தேசிய கல்விப் பிரச்சாரத்தைக்  குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். பின்னர் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி செல்லும் குடியரசுத் தலைவர், அங்கு ஸ்ரீ சத்ய சாய் உயர்கல்வி நிறுவனத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

*****

ANU/SMB/BS/DL


(Release ID: 1978003) Visitor Counter : 114