குடியரசுத் தலைவர் செயலகம்
சாத் பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 NOV 2023 6:08PM by PIB Chennai
சாத் பூஜையை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
"சாத் பூஜையின் புனிதமான தருணத்தில், சக குடிமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாத் பூஜை என்பது சூரிய பகவானின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகையாகும். ஆறுகள், குளங்கள் மற்றும் பிற நீர் ஆதாரங்களில் மக்கள் தங்களது பக்தியையும் நன்றியையும் வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும். இயற்கையுடன் தொடர்புடைய இந்த விழா, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக செயலாற்றுவதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. சாத் பூஜை நம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், நம் அன்றாட வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் வலியுறுத்தி அந்த தத்துவங்களை நமக்கு நினைவூட்டுகிறது.
நமது நீர் வளங்களையும், சுற்றுச்சூழலையும் தூய்மையானதாக மாற்றுவதன் மூலம் இயற்கை அன்னையை மதிக்க உறுதியேற்போம். இந்த நன்னாளில், அனைத்து மக்களின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்".
இவ்வாறு குடியரசுத்தலைவர் திருமதி திரெளபதி முர்மு தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
*****
ANU/AD/PLM//DL
(रिलीज़ आईडी: 1977888)
आगंतुक पटल : 120