அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ஆகியவை தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிதி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ஒன்றிணைந்துள்ளன
Posted On:
17 NOV 2023 3:06PM by PIB Chennai
இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டிடிபி) , இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (சிட்பி) ஆகியவை உள்நாட்டு அல்லது இறக்குமதி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் வணிகப் பயன்பாட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எளிதாகக் கடன் பெறுவதற்கு வசதியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கண்டுள்ளன.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் (டிடிபி) மற்றும் சிட்பி ஒரு கடன் வழங்கும் நடைமுறையை தொடங்க உள்ளன. இதில் டி.டி.பி, சிட்பி ஆகியவை இதற்கு முன்பு நிதியளித்த நிறுவனங்களின் கூடுதல் நிதித் தேவைகளைக் குறிப்பிடும். பிரத்யேக முக்கிய தொடர்புகளுடன், இரு நிறுவனங்களும் தடையற்ற பரிந்துரை பரிமாற்றத்திற்கான ஒருங்கிணைப்பை ஒழுங்குபடுத்தும்.
டி.டி.பி, சிட்பி ஆகியவை அந்தந்த கொள்கை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தகுதியுள்ள எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு நிதி உதவியை வழங்கும்.
இந்த ஒத்துழைப்பு நிதி உதவிக்கு அப்பால் விரிவடைகிறது, இந்த முன்முயற்சியை ஊக்குவிப்பதற்கும் பரந்த பார்வையாளர்களை அடைவதற்கும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் கூட்டு தொடர்பு / சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள இந்த தொடர்பு நடவடிக்கைகள், மார்க்கெட்டிங் நடவடிக்கைகளின் நோக்கம் ஆகியவை இந்தத் திட்டத்தை அமல்படுத்தப்படும் போது மேற்கொள்ளப்படும்.
***********
ANU/PKV/BS/RR/KV
(Release ID: 1977656)
Visitor Counter : 117