நிதி அமைச்சகம்

திருப்பதியில் ஜிஎஸ்டி பவன் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் உரையாற்றினார்

Posted On: 16 NOV 2023 5:40PM by PIB Chennai

திருப்பதி மத்திய ஜிஎஸ்டி ஆணையரகத்தில் ஜிஎஸ்டி பவன் கட்டிடத்திற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று (16.11.2023) நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்த் துறை செயலாளர் திரு சஞ்சய் மல்ஹோத்ரா, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் தலைவர் திரு சஞ்சய் குமார் அகர்வால்; உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தனது உரையில்,  சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக விசாகப்பட்டினம் மண்டல சிஜிஎஸ்டி மற்றும் சுங்க அலுவலகத்துக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். வரி செலுத்துவோருக்கு எளிதா நடைமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

திருப்பதி ஆணையரகம் கடந்த ஆண்டு ரூ.8,264 கோடியையும், இந்தாண்டு செப்டம்பர் வரை ரூ.5,019 கோடியையும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாயாக ஈட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஆணையரகம் கடந்த சில ஆண்டுகளில் 300 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று  திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

-------------------

ANU/AD/PLM/RS/KRS

(Release ID: 1977438)



(Release ID: 1977500) Visitor Counter : 80


Read this release in: English , Urdu , Hindi , Bengali-TR