வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மை தீபாவளி - குப்பையில் இருந்து தூய்மை வரை - தில்லி மாநகராட்சியின் “ஆபரேஷன் க்ளீன் தில்லி” தீபாவளிக்குப் பிந்தைய தூய்மைப் பணிகளில் கவனம் செலுத்துகிறது

Posted On: 13 NOV 2023 2:28PM by PIB Chennai

பட்டாசுகள் மற்றும் கொண்டாட்டங்களால் தீபாவளிப் பண்டிகையன்று தில்லியில் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் நடவடிக்கையாக தீபாவளிக்குப் பிந்தைய தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. 'ஆபரேஷன் க்ளீன் தில்லி' என்ற இந்த இயக்கத்தின் மூலம் தூய்மையை மீட்டெடுக்கும் பணியை தில்லி மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

ஆபரேஷன் க்ளீன் தில்லி-யின் கீழ், தெருக்களைத் தூய்மைப்படுத்தும் முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. திறந்தவெளியில் உள்ள குப்பைகள், பட்டாசுக் கழிவுகள் மற்றும் பிற கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதே நேரத்தில், தீபாவளியால் உருவாகும் கழிவுகளை முறையாக அகற்றுவதை உறுதி செய்யும் ஒரு உத்திசார் 'கழிவு சேகரிப்புத் திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. தீபாவளிக்குப் பிந்தைய கழிவுகளை சரியான நேரத்தில் சேகரிப்பதற்கு முன்னுரிமை அளித்து செயல்படுவதுடன், பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதையும் நோக்கமாக்க் கொண்டு தில்லி மாநகராட்சி செயல்படுகிறது. நகரின் கழிவு மேலாண்மைப் பிரவு, பண்டிகைக் காலத்துக்குப் பிறகு தூய்மையை மீட்டெடுக்க அயராது பாடுபடுகிறது.

தீபாவளியால் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தாக்கத்தை உணர்ந்த அதிகாரிகள், காற்றின் தரம் குறித்த ஆய்வுகளை அதிகரித்தனர். அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் குறைக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டனர். தில்லி, ஒரு கூட்டு உறுதியுடன், தீபாவளிக்குப் பிந்தைய தூய்மையான, ஆரோக்கியமான சூழலை நோக்கி முன்னேறியுள்ளது. பொறுப்பான கொண்டாட்டங்கள் மற்றும் நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பாக ஒரு முன்னுதாரணத்தை தில்லி ஏற்படுத்தியுள்ளது.

 

******

ANU/SMB/PLM/KPG



(Release ID: 1976648) Visitor Counter : 106