புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புவி அறிவியல் அமைச்சகம், 62 தூய்மை இயக்கங்கள் மற்றும் மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளுடன் சிறப்பு இயக்கம் 3.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 13 NOV 2023 12:12PM by PIB Chennai

மத்திய புவி அறிவியல் அமைச்சகம் புது தில்லியின் பிரித்வி பவனில் உள்ள அதன் தலைமையகத்திலும்  நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அதன் பத்து நிறுவனங்களிலும்  மூன்றாவது கட்ட சிறப்புத் தூய்மை இயக்கத்தின் (சிறப்பு இயக்கம் 3.0) கீழ் பல்வேறு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டது.

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசின் சிறப்பு இயக்கம் 3.0, அக்டோபர் 2, 2023 அன்று தொடங்கப்பட்டது. இது அக்டோபர் 31, 2023 வரை தொடர்ந்து நடைபெற்றதுஇதில் குப்பைகள் அகற்றம், தூய்மைப் பணிகள்கோப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண்பது, பொது மக்களின் குறைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் அலுவலகத் தூய்மை மற்றும் நிர்வாகத் தூய்மையை நிறுவனமயமாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த இயக்கம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன், 2023 செப்டம்பரில், மூத்த அதிகாரிகளுடன் தலைமையக வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அக்டோபர் 2023-ல் சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக மத்திய புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் அதன் நிறுவனங்கள் 62 தூய்மை இயக்கங்களை நடத்தின. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் அகற்ப்பட்டு, மொத்தம் 7,375 சதுர அடி இடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனபொது சேவை மனப்பான்மையிலும், பொதுமக்களின் பங்கேற்பு என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், பள்ளிகள், கடற்கரைகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனை வளாகங்கள், குளங்கள், பூங்காக்கள் போன்றவற்றில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சகத்தின் அலுவலகங்களில் தேவையற்ற பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் புவி அறிவியல் அலுவலகத்துக்கு ஐந்து லட்சத்து நான்காயிரத்து முந்நூற்று முப்பத்து மூன்று ரூபாய் (ரூ. 5,04,333/-) வருவாய் கிடைத்துள்ளது.

ஒரு மாத கால இயக்கத்தின் போது, இந்த அமைச்சகம் 9,577 காகிதக் கோப்புகள் மற்றும் 524 மின்னணு கோப்புகளை ஆய்வு செய்ததுஅவற்றில் முறையே 2,662 காகிதக் கோப்புகள் மற்றும் 20 மின்னணுக் கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு அந்தக் கோப்புகள் அகற்றப்பட்டன/மூடப்பட்டன. நிலுவையில் உள்ள மக்கள் அனைத்துக் குறைகளுக்கும் (38 குறை தீர்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் 17 மேல்முறையீடுகள்) மற்றும் 6 நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்புகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

******

 

ANU/SMB/PLM/KPG

 

 



(Release ID: 1976632) Visitor Counter : 98