அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கம் சார்ந்த தொழில்முனைவோர் மூலம் காஷ்மீரின் கண்டறியப்படாத திறன்களை ஊக்குவிப்பதற்கான செயல்திட்டம் வட்டமேசைப் பயிலரங்கில் உருவாக்கப்பட்டது

Posted On: 13 NOV 2023 12:01PM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை (என்..எஃப்), காஷ்மீர் பல்கலைக்கழகம், என்..எஃப் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில்முனைவோர் கவுன்சில் ஆகியவை இணைந்து, காஷமீரில் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் சூழல் அமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் 08.11.2023 அன்று ஸ்ரீநகரில் ஒரு பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

"தொழில்முனைவோர் முன்னேற்றத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி (ஐடிஏ)" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஒரு நாள் வட்டமேசைப் பயிலரங்கில், ஜம்மு-காஷ்மீரில், இதுவரை பயன்படுத்தப்படாத திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் குறித்தும், இதுவரை அடையப்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

"இந்தச் சூழல் அமைப்பை மேம்படுத்துவோரின் ஆதரவுடன் தொழில்முனைவோர் அதிவேகமாக வளரவும், இந்த செயல்பாட்டில், தங்கள் சொந்த திறனை சிறந்த வழிகளில் பயன்படுத்தவும் முடியும்" என்று என்..எஃப் தலைமை விஞ்ஞானி டாக்டர் விபின் குமார் கூறினார்.

அமேசான் இந்தியாவின் பொதுக் கொள்கை துணைத் தலைவர் திரு சேத்தன் கிருஷ்ணசாமி பேசுகையில், உலகளாவிய பிராண்டுகளை உருவாக்கும் திறமையைக் கொண்ட தொழில்முனைவோரின் தாயகமாக ஜம்மு  காஷ்மீர் உள்ளது என்றார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய  கண்டுபிடிப்புச் சூழலை வலுப்படுத்த மேற்கொண்டுள்ள முன்முயற்சிகள் குறித்து காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டாக்டர் நிசார் அகமது மிர் பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார்.

இந்த வட்டமேசைப் பயிலரங்கில்மத்திய மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு நிறுவனங்கள், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி, ஜம்மு காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகைத் தகவல் அலுவலகம் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள், அலுவலகங்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

*****

 

ANU/SMB/PLM /KPG

 

 


(Release ID: 1976601) Visitor Counter : 86