திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 வெற்றிகரமாக நிறைவுற்றது
Posted On:
11 NOV 2023 2:52PM by PIB Chennai
தூய்மையைக் கடைபிடித்தல், அரசு செயல்முறைகளில் அதிகாரத்துவ பின்னடைவைக் குறைத்தல் ஆகியவற்றுக்காக குரல் கொடுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் பொறுப்புடைமை சார்ந்த தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் அக்டோபர் முதல் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 ஐத் தொடங்கியது.
அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை, நிலுவையில் உள்ள விஷயங்களை விரைவாக அகற்றுதல், இடைவெளிகளைத் திறமையாக நிர்வகித்தல், சுத்தமான மற்றும் பசுமையான சூழலை மேம்படுத்துதல் ஆகியவை இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கங்களாக இருந்தன.
சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 வெற்றிகரமாக முடிவடைந்திருப்பது அமைச்சகத்தின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் கீழ்நிலை அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் செப்டம்பர் 15ம் தேதியில் தொடங்கிய ஆயத்தக் கட்டம் மற்றும் இயக்க காலத்தில் சுத்தம் செய்வதற்கான குறிப்பிட்ட இலக்குகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகித்தன.
நிலுவையில் உள்ள விஷயங்களை அகற்றுவது மட்டுமல்லாமல், இடத்தைப் பயன்படுத்துவதை மேம்படுத்துவதற்கும், அலுவலகங்களில் ஒட்டுமொத்த பணியிட அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் சிறப்புக் கவனம் செலுத்தியது.
ஆயத்த கட்டம் மற்றும் இயக்கம் முழுவதும், நாடு முழுவதும் 8354 இடங்கள் தூய்மை படுத்தப்பட வேண்டியவை என அடையாளம் காணப்பட்டன. 4579 க்கும் மேற்பட்ட இயல் கோப்புகள் முழுமையான மதிப்பாய்விற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், தோராயமாக 660 சதுர அடி இடத்தை சுத்தம் செய்வதே எதிர்பார்த்த விளைவு ஆகும்.
மேலும், குப்பைகளை அகற்றுவதன் மூலம் மொத்த வருவாய் ரூ. 20,94,013/ கிடைத்தது. இயக்கத்தின் தினசரி முன்னேற்றம் ஒரு பிரத்யேக குழுவால் விடாமுயற்சியுடன் கண்காணிக்கப்பட்டது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகள் துறையால் வழங்கப்படும் இணையதளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டது.
****
PKV/BS/DL
(Release ID: 1976367)
Visitor Counter : 90