கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கலாச்சார அமைச்சகம் சிறப்பு தூய்மை இயக்கம் 3.0ஐ நிறைவு செய்துள்ளது

Posted On: 11 NOV 2023 12:57PM by PIB Chennai

கலாச்சார அமைச்சகம், அதன் அமைப்புகளுடன் இணைந்து, சிறப்பு தூய்மை இயக்கம் 3.0 இல் பங்கேற்றது, அதே நேரத்தில் தூய்மைப் பணியை நிறுவனமயமாக்குதல் மற்றும் அரசு அலுவலகங்களில் கிடப்பில் இருக்கும் நிலுவைப் பணிகளைக் குறைத்தல் ஆகியவற்றில் முக்கியமாக கவனம் செலுத்துகிறது.

தூய்மை இயக்கம் அமல்படுத்தப்பட்ட கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அனைத்து 449 இடங்களிலும்  தூய்மை பணிகளை மேற்கொள்வதில் அமைச்சகம் 100% இலக்குகளை எட்டியுள்ளது.

அனைத்து 15,969 இயல்  கோப்புகள் மற்றும் 2133 மின் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 4975 இயல கோப்புகள் & 1620 மின் கோப்புகள் முறையே களையெடுக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும், 138 இயல் கோப்புகள் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்திற்கு மாற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. பழைய பொருட்களை அப்புறப்படுத்தியதன் மூலம் ரூ.42,15,715/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மொத்தம் 22272 சதுர அடி. பகுதி மீட்கப்பட்டுள்ளது.

இலக்குகளில் 83% பொதுக் குறைகளை தீர்த்து வைக்கப்பட்டதும் அடங்கும், பிரதமர் அலுவலகத்தின் 81.8% குறிப்புகள், 67.8% மாநில அரசு குறிப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் 64.2% குறிப்புகள் மற்றும் 51% நாடாளுமன்ற உத்தரவாதங்கள். அமைச்சகம் சார்பில் 8 செய்தி அறிக்கைகள் வெளியீடு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அமைச்சகம் மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளால் 173 சமூக ஊடக எக்ஸ் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

****  

PKV/BS/DL


(Release ID: 1976352) Visitor Counter : 94