வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அசாமின் தனித்துவமான தூய்மை தீபாவளி கொண்டாட்டம் 'கழிவுகளில் இருந்து உணவுக்கு' வழிவகுக்கிறது

Posted On: 10 NOV 2023 1:21PM by PIB Chennai

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் நாடு முழுவதும் 'தூய்மையான தீபாவளி, மகிழ்ச்சியான தீபாவளி’ என்ற இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

 

தூய்மையான தீபாவளி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திடுவதன் மூலமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த உறுதிமொழி எடுப்பதன் மூலமும், பயன்படுத்தப்படாத, பழைய பொருட்களை ஆர் ஆர் ஆர் மையங்களுக்கு நன்கொடையாக வழங்குவதன் மூலமும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளைப் பயன்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியைக் கொண்டாடுவதில் நகரங்கள் கவனம் செலுத்துகின்றன.

 

இந்த இயக்கத்தின் கீழ், தீபாவளிக்குப் பின் ஏற்படும் கழிவுகளை சேகரிக்க அசாம் ஒரு தனித்துவமான முயற்சியை எடுத்துள்ளது. அசாமில் தீபாவளி அன்று, குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களின் நுழைவாயில்களில் வாழை மரங்கள் நட்டு இலைகளில் அகல் விளக்குகளை ஏற்றுவது வழக்கம்.

 

.

 

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் பயன்படுத்தப்படாமல் விடப்படும் வாழை மரங்கள், தண்டுகள் மற்றும் இலைகளை யானைகளுக்கு தீவனமாக பயன்படுத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சுற்றியுள்ள தேசிய பூங்காக்களிடம் ஒப்படைக்கப்படும்.

 

அருகில் தேசிய பூங்காக்கள் இல்லாத இடங்களில், பொதுமக்கள் வாழை மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து விடுகின்றனர். அங்கிருந்து, நகராட்சி ஊழியர்கள் இந்த மரங்களின் தண்டுகளை பசு காப்பகங்கள் அல்லது மையத்தில் அமைந்துள்ள 'குப்பையிலிருந்து உரக்குழி  மையங்களிடம் ஒப்படைப்பார்கள். இத்தகைய கழிவுகளை அகற்ற, ஏற்கனவே, பல்வேறு இடங்களில், 104 மத்திய உரக்குழிகளும், 6,000-க்கும் மேற்பட்ட உள்நாட்டு உரம் தயாரிக்கும் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

***

ANU/SMB/BS/RS/KRS

(Release ID: 1976092


(Release ID: 1976229) Visitor Counter : 98


Read this release in: English , Urdu , Hindi , Assamese