வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மாறுபட்ட உத்தியுடன் நவி மும்பையின் பசுமை உறுதிமொழி
Posted On:
10 NOV 2023 12:22PM by PIB Chennai
பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் தலைமையிலான 'தூய்மை தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளி' முன்முயற்சி நாடு முழுவதும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்துகிறது, இது தீபாவளியைச் சுத்தமாகவும், பசுமையாகவும் கொண்டாட குடிமக்களை வலியுறுத்தும் நாடு தழுவிய இயக்கமாகும். நவி மும்பைவாசிகள் இந்த இயக்கத்தை முழு மனதுடன் தழுவி, ஷாப்பிங் மால்களில் நவி மும்பை தொடங்கிய செல்ஃபி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். இந்த தனித்துவமான முயற்சி மால்களுக்கு வருகை தர வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.
தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம் 2.0-ன் கீழ் தூய்மை தீபாவளி மகிழ்ச்சியான தீபாவளி இயக்கத்தின் ஒரு பகுதியாக, தூய்மை தீபாவளி கையெழுத்து இயக்கத்தில் பதிவு செய்ய வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். மாலில் உள்ள செல்ஃபி புள்ளிகளில் தூய்மை தீபாவளி செல்ஃபி மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தலாம். தூய்மை தீபாவளி கையொப்ப இயக்கத்தில் பதிவு செய்த குடிமக்களுக்குப் பொருள் வாங்குவதில் தள்ளுபடி கூப்பன்களுடன் நவி மும்பை மாநகராட்சி வெகுமதி அளிக்கிறது, இது மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவோருக்கு சாதகமான வலுவூட்டலை உருவாக்குகிறது. குடிமக்களை உள்ளடக்கிய மற்றும் தூய்மைக்கான அர்ப்பணிப்புடன் பண்டிகை மனநிலையை வளர்க்கும் ஒரு தனித்துவமான முயற்சியாகும் இது.
தூய்மைக்கான மக்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட தனிநபர்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தூய்மை தீபாவளிக்கான அர்ப்பணிப்பின் காட்சிப் பிரதிநிதித்துவமாகவும் இந்த இயக்கம் செயல்படுகிறது. இந்த முயற்சியில் நவி மும்பைவாசிகள் ஒன்றிணையும்போது, தூய்மை தீபாவளி 'மகிழ்ச்சியான தீபாவளி' வெறுமனே ஒரு இயக்கமாக மட்டுமின்றி பசுமையான, தூய்மையான மற்றும் நிலையான பண்டிகை காலத்தை நோக்கிய ஒரு கூட்டு இயக்கமாக மாறுகிறது.
***
(Release ID: 1976074)
ANU/SMB/PKV/AG/KRS
(Release ID: 1976218)