ஆயுஷ்
கல்வி, ஆராய்ச்சி, தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் ஆயுர்வேத மருத்துவ முறை உலக அளவில் கட்டமைக்கப்படுகிறது: மத்திய ஆயுஷ் அமைச்சர்
Posted On:
09 NOV 2023 5:06PM by PIB Chennai
கல்வி, ஆராய்ச்சி, தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் உலக அளவில் ஆயுஷ் அமைச்சகத்தால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஆயுர்வேத சூழல் கட்டமைக்கப்படுகிறது என ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடைபெற்ற எட்டாவது ஆயுர்வேத நாள் பெரு விழா தொடக்க அமர்வில் மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் கூறினார். ஆயுர்வேத மருத்துவம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது பண்டைய காலத்திலிருந்து இந்தியாவின் சமூகம், கல்வி, சேவை மற்றும் வாழ்க்கைமுறை ஆகியவற்றில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றார்.
சமீபத்திய ஜி 20 கூட்டம், இந்தியா உறுப்பு நாடுகளுக்கு 'வசுதைவ குடும்பகம்' என்ற செய்தியை வழங்கியது. இது அனைவரின் ஒப்புதலையும் பெற்றது. மேலும் ஜி20 பிரகடனத்தின் மூலம் முன்னெப்போதும் இல்லாத வெற்றியை அடைந்தது என்று திரு சோனோவால் கூறினார். ஆயுஷ் ஒன்று மட்டுமே புதிய பரிசோதனைகளுடன் தொடர்ந்து முன்னேறும். இதுவே, இந்தியாவை வளரும் நாடாக இருந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது.
விவசாயம், தோட்டக்கலை மற்றும் கால்நடை மருத்துவம் தொடர்பான ஆயுர்வேத தயாரிப்புகளை வணிக ரீதியாக உற்பத்தி செய்வதன் மூலம் இளைஞர்களும், பொதுமக்களும் வெற்றிகரமான ஸ்டார்ட் அப்களை உருவாக்க முடியும். இதுபோன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சியால், இந்தியாவின் பொருளாதாரம் தற்சார்பு பொருளாதாரமாக வலுப்பெறும் என்று திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்தார்.
ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் முஞ்பாரா மகேந்திரபாயும் கலந்து கொண்டார்.
***
ANU/AD/BS/RS/KRS
(Release ID: 1975980)
Visitor Counter : 129