திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன்களை உருவாக்குவதற்கும், இந்திய இளைஞர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கும் இந்திய திறன் மையமும், கான்பூர் ஐஐடி-யும் ஒன்றிணைந்துள்ளன
Posted On:
09 NOV 2023 4:53PM by PIB Chennai
கான்பூர் ஐஐடி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், டசால்ட் ஏர்கிராப்ட் சர்வீசஸ் இந்தியா ஆகிய 3 முக்கிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளதாக கான்பூரில் உள்ள இந்தியத் திறன் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. புதுதில்லியில் மத்திய அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்த இணைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதன் மூலம் இளைஞர்களின், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதிய தலைமுறை படிப்புகளில் தரமான முறையில் அணுகலைப் பெறும் வகையில், முழுமையான வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும்.
நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், கான்பூர் ஐஐடி, கான்பூர் இந்தியத் திறன் நிறுவனம், , எச்ஏஎல் மற்றும் டசால்ட் ஏர்கிராப்ட் சர்வீசஸ் இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும், இந்திய இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது என்றார்.
முதன்முறையாக கல்வி நிறுவனம், திறன் மேம்பாட்டு நிறுவனம், தொழில்துறை ஆகியவை ஒன்றிணைந்து இளைஞர்களின் எதிர்காலத்தை நிரூபிக்கும் முயற்சிகளை மேற்கொள்கின்றன என்றும் அவர் கூறினார்.
****
ANU/SMB/BS/RS/KRS
(Release ID: 1975961)
Visitor Counter : 103