பாதுகாப்பு அமைச்சகம்

2023, நவம்பர் 10 அன்று, இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள் நிலையிலான பேச்சுக்களில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தலைமை தாங்கி பங்கேற்கவுள்ளனர்

Posted On: 09 NOV 2023 9:26AM by PIB Chennai

இந்திய - அமெரிக்கா இடையே பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சக நிலையிலான பேச்சு வார்த்தையில் பங்கேற்கவும், அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் இருதரப்பு சந்திப்பை நடத்தவும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு லாயிட் ஆஸ்டின், 2023 நவம்பர் 09, 10 ஆகிய நாட்களில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 09 அன்று புதுதில்லிக்கு வருகை தரும் அமைச்சர் திரு ஆஸ்டினுக்கு, பாலம் தொழில்நுட்பப் பகுதியில் முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் திரு ஆஸ்டின், வெளியுறவு அமைச்சர் திரு ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் நவம்பர் 10 அன்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் ஆகியோருடன் நடைபெறும்  இருதரப்பு பேச்சுக்களில் இணைந்து தலைமை தாங்குகின்றனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் திரு ஆஸ்டின் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே இருதரப்பு சந்திப்பு நடைபெற உள்ளது. இருநாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள்  நிலையிலான  பேச்சுவார்த்தை மற்றும் இருதரப்பு சந்திப்பின் போது பல்வேறு உத்திகள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள்  குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அமைச்சர் திரு ஆஸ்டின் 2023 ஜூன் மாதத்தில்  இந்தியா வந்திருந்த போது பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.

***

ANU/SMB/IR/AG/KV



(Release ID: 1975884) Visitor Counter : 106