பாதுகாப்பு அமைச்சகம்

தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை தலைசுற்றல் மற்றும் சமநிலைக் கோளாறு நோயாளிகளுக்கான அதிநவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளது

Posted On: 09 NOV 2023 1:22PM by PIB Chennai

தில்லிண்டோன்மென்ட்டில் உள்ள ராணுவ மருத்துவமனை, தலைசுற்றல் மற்றும் சமநிலைக் கோளாறு நோயாளிகளுக்கான அதிநவீன ஆய்வகத்தை நிறுவியுள்ளது. இது சமநிலைக் கோளாறுகள் மற்றும் தலைசுற்றல் நோயாளிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்ப ஆய்வகத்தை லெப்டினன்ட் ஜெனரல் அரிந்தம் சாட்டர்ஜி நவம்பர் 7, 2023 அன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் (சீனியர் கர்னல்), அதிநவீன ஆய்வகத்தை நிறுவியதற்காக தில்லி கன்டோன்மென்ட்டின் ராணுவ மருத்துவமனையின் குழுவைப் பாராட்டினார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், தலைசுற்றல் கோளாறுகளைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் திறன்களை மேம்படுத்துவதிலும் மருத்துவமனை வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்தார்.

ஆய்வகம் புதிய நோயறிதல் எல்லைகளைத் திறக்கும் என்றும் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்களின் பயிற்சியில் சிறந்த நடைமுறைகளை உள்ளடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி பல ஏ.எஃப்.எம்.எஸ் ஈ.என்.டி மையங்களில் கிடைப்பதால், பல மைய ஆராய்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று  லெப்டினன்ட் ஜெனரல் அரிந்தம் சாட்டர்ஜி கேட்டுக் கொண்டார்.

*****

(Release ID: 1975829)

ANU/AD/PKV/KPG/KV



(Release ID: 1975873) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi , Telugu