கூட்டுறவு அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லியில் தேசிய கூட்டுறவு கரிம நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவித்தல்' குறித்த தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்

Posted On: 08 NOV 2023 6:04PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, புதுதில்லியில் தேசிய கூட்டுறவு கரிம நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 'கூட்டுறவுகள் மூலம் கரிமப் பொருட்களை ஊக்குவித்தல்' என்ற தேசிய கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். சின்னம், இணையதளம் மற்றும் கையேட்டைத் அறிமுகம் செய்ததுடன், தேசிய கூட்டுறவு கரிம நிறுவன உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சர் பி.எல்.வர்மா, கூட்டுறவு அமைச்சகத்தின் செயலர், என்.சி.ஓ.எல்., தலைவர் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அமிர்த கால ஆண்டில் நிர்ணயித்த பல இலக்குகளில் இயற்கை வேளாண்மையும் ஒன்றாகும் என்று திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். இந்த இலக்கை அடைய, நாம் பல முனைகளில் செயல்பட வேண்டும். அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பதன் மூலம் முன்னேற வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பன்முக அணுகுமுறை இல்லாமல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை 50 சதவீதத்திற்கு மேல் கொண்டு செல்லும் இலக்கை அடைய முடியாது என்றும், இந்த இலக்கை அடைய இன்று முடிக்கப்பட்ட இந்த மூன்று பணிகளும் மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார். இன்று நாம் வேளாண் உற்பத்தித் துறையில் தன்னிறைவு பெற்றிருப்பது மட்டுமல்லாமல், உபரியாகவும் இருப்பது இந்தியாவுக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்றும், இந்த பயணத்தை நாம் மதிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார். உற்பத்தியை அதிகரிக்க உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அதிகமாகப் பயன்படுத்துவதன் மோசமான விளைவுகள் இன்று நம் முன் தோன்றத் தொடங்கியுள்ளன என்று திரு அமித் ஷா கூறினார். இவற்றின் அதிகப்படியான பயன்பாடு வளத்தைக் குறைப்பது, நிலம் மற்றும் தண்ணீரை மாசுபடுத்துவது மட்டுமல்லாமல், பல நோய்களை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இயற்கை வேளாண்மையை பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த 5-6 ஆண்டுகளில், நாட்டில் லட்சக்கணக்கான விவசாயிகள் இயற்கை வேளாண்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அத்தகைய விவசாயிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார். முறையான சான்றிதழ் இல்லாமல் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சிக்கல் எழுகிறது என்று அவர் கூறினார். இப்பிரச்னைக்கு தீர்வு காண, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2023 ஜனவரி 11 அன்று தேசிய கூட்டுறவு கரிம நிறுவனம் (என்.சி.ஓ.எல்) அமைக்க ஒப்புதல் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

****

ANU/SM/IR/RS/KRS

(Release ID: 1975702)
 



(Release ID: 1975745) Visitor Counter : 97