ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
இந்தியாவும், நெதர்லாந்தும் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதில் ஒத்துழைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன
प्रविष्टि तिथि:
08 NOV 2023 4:22PM by PIB Chennai
நெதர்லாந்தின் ஹேக்கில் மருத்துவ தயாரிப்பு ஒழுங்குமுறை மற்றும் மருத்துவ தயாரிப்புகள் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், நெதர்லாந்தும் கையெழுத்திட்டுள்ளன.
நெதர்லாந்தின் சுகாதாரம், நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. எர்னஸ்ட் குய்பர்ஸுடன் மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை இணையமைச்சர் திரு. பகவந்த் குபா நடத்திய சந்திப்பின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நவம்பர் 6 முதல் 8 வரை நெதர்லாந்தில் நடைபெறும் இரண்டாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திரு குபா தலைமையிலான இந்திய தூதுக்குழு நெதர்லாந்து சென்றுள்ளது. உலக உள்ளூர் உற்பத்தி தளம் என்பது மருந்துகள் மற்றும் பிற சுகாதார தொழில்நுட்பங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக சுகாதார அமைப்பின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் இது.
ஐரோப்பிய மருந்துகள் முகமையையும் அமைச்சர் பார்வையிட்டார். அவர் மருந்துகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்பப் பிரிவின் பணிப்பாளர் திருமதி கார்லா வான் ரூய்ஜெனைச் சந்தித்து, மருந்து மற்றும் மருத்துவ தொழில்நுட்பத் தொழில்களில் உள்ள ஒழுங்குமுறைகள் குறித்து அவருடன் பயனுள்ள வகையில் கலந்துரையாடினார்.
தனது பயணத்தின் போது, ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகமான ரோட்டர்டாம் துறைமுகத்தைப் பார்வையிட்ட திரு குபா, துறைமுகத்தின் ஹைட்ரஜன் மையத் திட்டங்கள் குறித்து திரு. போட்விஜ்ன் சிம்மன்ஸ், சிஓஓ மற்றும் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்தில் ரோட்டர்டாம் ஒரு மையமாக மாறும். இந்தியாவின் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிஜியின் திறமையான தலைமையின் கீழ் பசுமை ஹைட்ரஜனில் உலகளாவிய தலைவராக மாறுவதற்கான இந்தியாவின் நோக்கம் ஆகியவற்றையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பில்தோவன் பயோலாஜிகல்ஸ் (சைரஸ் பூனவல்லா குழுமம்) நிறுவனத்தையும் திரு குபா பார்வையிட்டார்.
***
ANU/PKV/BS/AG/KPG
(रिलीज़ आईडी: 1975689)
आगंतुक पटल : 221