ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ரசாயனங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை சிறப்பு பிரச்சாரம் 3.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
07 NOV 2023 12:21PM by PIB Chennai
மத்திய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்கள் துறை சிறப்பு இயக்கம் 3.0 -ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ ரசாயனங்கள் துறை 2023, அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரையிலான காலத்தில் சிறப்பு இயக்கம் 3.0-ஐ உற்சாகமாக செயல்படுத்தியது. நாடு முழுவதிலும் உள்ள 258 இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அடையாளம் காணப்பட்ட இலக்கு குறிப்புகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட குறைகள் அனைத்தையும் பொதுமக்கள் குறைதீர்ப்பு இணையதளம் மூலம் முழுமையாக நிறைவேற்றுவதற்கும் இந்த இயக்கம் வழிவகுத்தது.
முந்தைய ஆண்டில் தனது பதிவு அறையை வெற்றிகரமாக சுத்தம் செய்த துறை, இயல்பு கோப்புகளை பதிவு அறைக்கு மாற்றுவதிலும், மின்னணு கோப்புகளை ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்தியது, இதன் விளைவாக 5181 மின்-கோப்புகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் உற்சாகமான பங்கேற்பின் விளைவாக மின்னணு மற்றும் இயல்பு கோப்புகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகமாக ஆய்வு செய்யப்பட்டன.
சிறந்த பணிச்சூழலை வழங்குவதற்காக இத்துறை பணி இடத்தைப் புதுப்பித்து மறுவடிவமைப்பு செய்துள்ளது. சிப்பெட், ஐ.பி.எஃப்.டி, எச்.ஓ.சி.எல், எச்.ஐ.எல் (இந்தியா) லிமிடெட் போன்ற துறையின் அனைத்து அமைப்புகளாலும் தூய்மை நடவடிக்கைகளை முதன்மையாக்குதல் மற்றும் நிறுவனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் தலைமையக அளவிலும், கிளை அலகு அளவிலும் இத்திட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தன. இந்த முயற்சியின் மூலம் 47,735 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, தேவையற்ற பொருட்களை அகற்றுதல் மூலம் ரூ.5,09,360- ஈட்டப்பட்டுள்ளது.
---
ANU/SMB/PKV/KPG
(Release ID: 1975322)
Visitor Counter : 97