நித்தி ஆயோக்

ஜி 20 புதுதில்லி தலைவர்கள் பிரகடனத்தின்படி "செழிப்பிற்கான உள்ளடக்கிய வர்த்தகம்" குறித்த பயிலரங்கை நித்தி ஆயோக் நடத்துகிறது

Posted On: 05 NOV 2023 2:52PM by PIB Chennai

நித்தி ஆயோக் நாளை (நவம்பர் 6, 2023 - திங்கட்கிழமை) புதுதில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ்மஹாலில் "செழிப்பிற்கான உள்ளடக்கிய வர்த்தகம்" என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்துள்ளது. ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தில் விவாதிக்கப்பட்ட பல்வேறு கருப்பொருள்கள் குறித்து நடத்தப்படும் 10 கருப்பொருள் பயிலரங்குகள் தொடரின் ஒரு பகுதியாக இந்தப் பயிலரங்கம் நடைபெற உள்ளது.

வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான உள்ளடக்கிய வர்த்தகத்தை மேம்படுத்துவது விரிவுபடுத்துவது குறித்து இந்தப் பயிலரங்கில் விவாதிக்கப்படும்.  உள்ளடக்கிய, நிலையான மற்றும் நெகிழ்வான உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளை ஊக்குவித்தல்; உள்ளடக்கிய வர்த்தகம்; கட்டணமில்லா நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை, வர்த்தக நிதி, சந்தை அணுகல், மாவட்டங்களில் இருந்து ஏற்றுமதியை ஊக்குவித்தல்குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாடு என பல அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.  மற்றும் பிறவற்றை ஒருங்கிணைக்க உதவுகிறது.

உலகளாவிய மதிப்பு சங்கிலிகள் குறித்து திட்டமிடுதல்வளர்ச்சிக்கான உள்ளடக்கிய வர்த்தகத்தை ஊக்குவித்தல், உள்ளடக்கிய வர்த்தகத்திற்கான சவால்கள் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் இடம்பெறும்.

****

PKV/PLM/DL



(Release ID: 1974871) Visitor Counter : 91