ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7-வது கங்கை உற்சவம் கோலாகல கொண்டாட்டம்

Posted On: 04 NOV 2023 6:53PM by PIB Chennai

கங்கையை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த கங்கை உற்சவத்தின் 7-வது பதிப்பை ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின் செயலாளர் திருமதி தேபஸ்ரீ முகர்ஜி தொடங்கி வைத்தார். தூய்மை கங்கை இயக்கத்தின் சிறப்புச் செயலாளரும் தலைமை இயக்குநருமான திரு ஜி. அசோக் குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய திருமதி தேபஸ்ரீ முகர்ஜி, கங்கை என்பது ஒரு நதி மட்டும் அல்ல என்றும் நம் அனைவரிடமும் எதிரொலிக்கும் ஒரு ஆழமான உணர்வு என்றும் கூறினார். நதிகளுடன் ஆழமாக வேரூன்றிய நமது கலாச்சாரத்தை அவர் எடுத்துரைத்தார். நதிகளைப் பாதுகாப்பது அனைவரின் பொதுவான பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

தூய்மை கங்கை இயக்கத்தின் (என்.எம்.சி.ஜி.) சிறப்பு செயலாளர் மற்றும் தலைமை இயக்குநர் திரு அசோக் குமார் பேசுகையில். 2008 ஆம் ஆண்டு, இந்தியாவின் தேசிய நதியாக கங்கை அறிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். இதுவே தேசிய கங்கை தினத்தைக் கொண்டாட வழிவகுத்தது என்று அவர்  தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும், கங்கை உற்சவ நாளில் நடைபெறும் கொண்டாட்டங்கள்  பல்வேறு தரப்பினரை ஒன்றிணைப்பதாக அவர் கூறினார்.

கங்கை உற்சவம்-  2023 விழா விளக்கு ஏற்றுதல் மற்றும் நமாமி கங்கை கீதத்துடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பிரபல ஓவியர் பண்டிட் அஜய் பிரசன்னாவின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. பாடல் மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

****  

AD/PLM/DL


(Release ID: 1974756)
Read this release in: English , Urdu , Hindi , Telugu