ஆயுஷ்
'ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' என்ற கருப்பொருள் செய்தியுடன் நாடு முழுவதும் 11 நகரங்களில் இளைஞர்களின் இருசக்கர வாகனப் பேரணி நாளை நடைபெறுகிறது
प्रविष्टि तिथि:
04 NOV 2023 6:29PM by PIB Chennai
'ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' என்ற கருப்பொருள் செய்தியுடன் நாடு முழுவதும் 11 நகரங்களில் இருசக்கர வாகனப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை (நவம்பர் 5, 2023) காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணிகளின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களை ஆயுர்வேத தினக் கொண்டாட்டத்தில் இணைப்பதும், ஆயுர்வேதத்தின் வளமான பாரம்பரியத்தை ஊக்குவிப்பதும் ஆகும்.
புதுதில்லி, லக்னோ, நாக்பூர், சென்னை, ஜெய்ப்பூர், பாட்டியாலா, குவாலியர், ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள் நடத்தப்படும்.
'ஒரே ஆரோக்கியத்திற்கான ஆயுர்வேதம்' இயக்கத்துடன் இளைஞர்களை இணைப்பதன் மூலம் வலுவான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் கூறினார்.
ஆயுர்வேத தினம் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஹரியானாவின் பஞ்ச்குலாவில் 2023 நவம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆயுஷ் அமைச்சகத்தால் ஆயுர்வேத தினத்தையொட்டி முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
****
AD/PLM/DL
(रिलीज़ आईडी: 1974751)
आगंतुक पटल : 152