நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நித்தி ஆயோக்கின் ஜி 20 பயிலரங்குத் தொடர் – “நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக வளர்ச்சிக்கான தரவுகளைப் பயன்படுத்துதல்”

Posted On: 04 NOV 2023 6:17PM by PIB Chennai

புதுதில்லி ஜி 20 தலைவர்கள் பிரகடனம் 2023-ல் வெளிப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு “வளர்ச்சிக்கான தரவுகளைப் பயன்படுத்துதல்” என்ற கருப்பொருளில் புதுதில்லியில் பயிலரங்கம் நடைபெற்றது. வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பலதரப்பு அமைப்பினர் இதில் பங்கேற்றனர்.  இந்திரா காந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இந்தப் பயிலரங்கை நித்தி ஆயோக்குடன் இணைந்து நடத்தியது.

நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் அரவிந்த் விர்மானி பேசுகையில், தரவுகள், அவற்றின் வரலாற்று முக்கியத்துவம், அவை ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவுதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தார்.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ்.கிருஷ்ணன், தரவுகளைச் சேகரித்துப் பயன்படுத்துவதில் அரசின் பல்வேறு முயற்சிகள், அவற்றில் உள்ள சவால்கள் மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களின் தாக்கம் குறித்துப் பேசினார்.

நித்தி ஆயோக்கின் ஸ்டார்ட்-அப் 20 செயல்பாட்டுக் குழுத் தலைவரும், நித்தி ஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கத்தின் திட்ட இயக்குநருமான டாக்டர் சிந்தன் வைஷ்ணவ் மற்றும் நித்தி ஆயோக்கின் இணைச் செயலாளர் திரு கே.எஸ். ரெஜிமோஜ் ஆகியோர் பயிலரங்க அமர்வுகளுக்குத் தலைமை வகித்தனர்.

இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகளில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்காக வளர்ச்சிக்கான தரவுகளைப் பயன்படுத்துவதற்கான வழியைப் பற்றி விவாதித்து ஒரு ஆவணத்தை இந்தப் பயிலரங்கு உருவாக்கும். இந்த ஆவணம் அடுத்து நடைபெறவிருக்கும் தேசிய பயிலரங்கில் ஒரு உள்ளீடாக அமையும்.

****  

PKV/PLM/DL


(Release ID: 1974738) Visitor Counter : 127