நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) மூலம் வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் குறித்த பயிலரங்கை நித்தி ஆயோக் நடத்துகிறது

Posted On: 04 NOV 2023 2:19PM by PIB Chennai

நித்தி ஆயோக், நாளை  (5 நவம்பர் 2023 -ஞாயிற்றுக்கிழமை) புதுதில்லியில் உள்ள ஹோட்டல் லீ மெரிடியனில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) மூலம் வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் குறித்த பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. ஜி 20 புதுதில்லி தலைவர்கள் பிரகடனத்தில் விவாதிக்கப்பட்ட 10 கருப்பொருள்களில் ஏற்பாடு செய்யப்படும் ஜி 20 கருப்பொருள் விளக்க பயிலரங்குகளின் வரிசையில் இது நான்காவது பயிலரங்காகும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து நித்தி ஆயோக் இந்தப் பயிலரங்கை நடத்துகிறது.

ஜி 20 புது தில்லி தலைவர்களின் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள் மற்றும் விளைவுகளை அடையத் தேவையான வளங்களை அடையாளம் காணும் வகையில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு துறையில், வல்லுநர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை ஒருங்கிணைக்க இந்தப் பயிலரங்கம் முயற்சிக்கும்.

மக்களுக்கு அதிகாரமளிக்கும் டிஜிட்டல் அடையாளங்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள், தரவு அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு, புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் என 4 பிரிவுகளாக இந்தப் பயிலரங்கில் விவாதங்கள் நடைபெறும். 

2023 நவம்பர் 1 முதல் நவம்பர் 9 வரை இதுபோன்ற பத்து கருப்பொருள் விளக்கப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜி 20 முதல் ஜி 21 வரை, வளர்ச்சிக்கான தரவுகள், சுற்றுலா, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகள், வர்த்தகம், இந்திய வளர்ச்சி மாதிரி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளை சீர்திருத்துதல் மற்றும் பருவ நிலை நிதி மற்றும் பசுமை மேம்பாடு ஆகியவை பயிலரங்குகளின் கருப்பொருள்களில் அடங்கும்.

****  

PKV/PLM/DL


(Release ID: 1974705) Visitor Counter : 92