நித்தி ஆயோக்
அடல் புதுமைக் கண்டுபிடிப்பு இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி மாணவர்களுக்கான புதுமைக் கண்டுபிடிப்புப் போட்டியான ஏடிஎல் மாரத்தான் 2023-24-க்கான விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ளன
प्रविष्टि तिथि:
03 NOV 2023 1:35PM by PIB Chennai
கல்வி அமைச்சகம், யுவா, யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஏடிஎல் மாரத்தான் 2023-24' க்கான விண்ணப்ப நடைமுறைகளை நித்தி ஆயோக் இன்று (03-11-2023) தொடங்கியுள்ளது.
ஏடிஎல் (அடல் டிங்கரிங் லேப்) மாரத்தான் என்பது இந்தியா முழுவதும் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அளவிலான புதுமைக் கண்டுபிடிப்புப் போட்டியாகும்.
இந்த போட்டியின் கடந்த பதிப்பில் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடமிருந்து 12000 க்கும் அதிகமான கண்டுபிடிப்புகள் பெறப்பட்டன. இந்த ஆண்டு ஏடிஎல் மாரத்தான் "இந்தியாவின் 75 வது குடியரசு தினத்தை" மையமாகக் கொண்டது. இதில் விண்வெளி, விவசாயம், பேரிடர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் பிரச்சினை தீர்வுத் திட்டங்களை மாணவர் குழுக்கள் உருவாக்க முடியும்.
ஏடிஎல் மாரத்தான் போட்டியில் பங்கேற்பது தொடர்பான தகவல்களுக்கு இந்த இணையதளத்தைப் பார்க்கவும்: https://atl.unisolve.org/
போட்டி தொடர்பான வீடியோ விளக்கத்திற்கு இந்த இணைப்பைப் பார்க்கவும்: https://www.youtube.com/watch?v=HufI5CnhkfU&ab_channel=AtalInnovationMissionOfficial
*****
(Release ID: 1974400)
SMB/PLM/KRS
(रिलीज़ आईडी: 1974558)
आगंतुक पटल : 216