புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தூய்மை இந்தியா 3-ம் கட்ட சிறப்பு இயக்கத்தில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சாதனைகள்
Posted On:
03 NOV 2023 12:07PM by PIB Chennai
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அதன் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, இந்திய சூரிய சக்திக் கழகம் ஆகியவற்றுடனும் மூன்று தன்னாட்சி நிறுவனங்களான தேசிய சூரிய சக்தி நிறுவனம், தேசிய காற்றாலை எரிசக்தி நிறுவனம், சர்தார் ஸ்வரண் சிங் தேசிய உயிரி எரிசக்தி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் பல்வேறு தூய்மைப் பணிகளை மேற்கொண்டது. தூய்மையை மேம்படுத்துவதற்கும், நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் அரசால் இந்த இயக்கம் நடத்தப்பட்டது.
தேவையற்ற பொருட்களை அகற்றுவது உட்பட அலுவலக வளாகங்களில் தூய்மையைப் பராமரிப்பதில் அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்தியது. 2023 அக்டோபர் 2 முதல் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் பின்வரும் பிரிவுகளில் 100 சதவீத இலக்குகள் எட்டப்பட்டுள்ளன:
• பொதுமக்கள் குறைதீர்ப்பு
• பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீட்டு மனுக்கள்
• கோப்புகள் ஆய்வு
• மின்-கோப்புகள் ஆய்வு
• நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் தூய்மை இயக்கங்கள்
பிற சாதனைகள்:
• நாடாளுமன்ற உறுப்பனர்களின் குறிப்புகள் பிரிவில் 94.73 சதவீத இலக்கு எட்டப்பட்டுள்ளது.
• 3,743 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 866 கோப்புகளின் மீது முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது
• 4,185 மின்-கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 796 மின்-கோப்புகள் மீது முழுமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது
• தேவையற்ற பொருட்களை அகற்றுதல் மூலம் ரூ.1,36,786/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
• தேவையற்ற பொருட்களை அகற்றுதல் மற்றும் பழைய கோப்புகளை அப்புறப்படுத்தியதால் சுமார் 250 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது.
******
ANU/SMB/PLM/KV
(Release ID: 1974401)
Visitor Counter : 124